February 22, 2020 Saturday 11.47 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 24 2020 3:35 PM

விபத்தில் சிக்கிய இயக்குநர் சுசீந்திரன் !

Posted Date : Jan 24 2020 3:35 PM

தமிழ் சினிமாவில் விளையாட்டை மய்யமாக கொண்டு எடுக்கப்பட்ட வெண்ணிலா கபடி குழு, ஜீவா, சாம்பியன் போன்ற பல படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் சுசீந்திரன். சமீபத்தில் வெளியான இவரது சாம்பியன் படம் கூட நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இன்று காலை தனது இல்லத்தின் அருகில் உள்ள சாலை ஓரத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார் சுசீந்திரன். அப்போது வேகமாகவந்த கார் ஒன்று இவர் மீது மோதி இருக்கிறது. காயமடைந்த சுசீந்திரன் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் இவரை சோதித்த பொழுது இவரது கை மூட்டுகள் உடைத்திருப்பது தெரிய வந்திருக்கிறது. அதன் பின்னர் லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தொடர்ந்து 3 வாரங்கள் ஓய்வில் இருக்குமாறு வலியுறுத்தியிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன .


 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை