May 30, 2020 Saturday 01.13 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 13 2020 5:22 AM

காற்று வாங்கும் பொறியியல் கல்லூரிகள் . இந்த வருடம் எத்தனை கல்லூரிகள் இழுத்து மூடப்படுகிறது ?

Posted Date : Feb 13 2020 5:22 AM

சென்னை: 

நாடு முழுவதும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர்கள் சேராததால் 50% இடங்கள் காலியாக உள்ளது என்று சென்னையில் AICTE தலைவர் அணில் சஹஸ்ரபுத்தே கூறியுள்ளார். அடுத்த 2 ஆண்டுகளுக்கு புதிய பொறியியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் தொடங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில புதிய படிப்புகளுக்கு மட்டுமே அனுமதி என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக , 2020 - 2021-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, அங்கீகாரம் தொடர்பான அனுமதி நீட்டிப்புக்கு தமிழகம் முழுவதும் உள்ள 519 பொறியியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் பிப்ரவரி 10 ம் தேதியுடன்  முடிவடைந்தது. பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்தைப் பெறுவதற்கு 509 கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 


கால அவகாசம் முடிவுற்ற நிலையில், 10 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பம் எதையும் சமர்ப்பிக்காத காரணத்தால் அந்த கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை நிறுத்தப்படுவதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் 40 கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை பாதியாக குறைக்க விண்ணப்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 - 2020-ம் கல்வியாண்டில், 519 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 71 ஆயிரம் இடங்களில் 82 ஆயிரத்து 819 இடங்கள் மட்டுமே நிரம்பியதும், இதே ஆண்டில் 18 பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை முற்றிலும் நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது. 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை