#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை
சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!
அடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் !
நாடாளுமன்றத்தில் தற்போது எம்.பி.க்களாக இருப்பவர்களில் குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் 30 சதவிகிதம் பேர் என ஏடிஆர் என்ற ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தகவல் அளித்திருக்கிறது. அதேபோல், குற்றப் பின்னணி கொண்ட எம்.பி.க்கள் நிறைந்த கட்சியாகவும் தற்போது பாரதிய ஜனதா உருவெடுத்திருக்கிறது.
ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளில் பாரதிய ஜனதாவில்தான் அதிக அளவிலான குற்றப்பின்னணி கொண்ட எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர். அந்தக் கட்சியில் மொத்தம் உள்ள எம்.பி.க்களில் 87 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அதிகப்பட்சமாக பாபு ராவ் சோயம் என்ற எம்.பி மீது மட்டும் 52 வழக்குகள் உள்ளன.
காங்கிரஸை பொருத்தவரை குற்றப் பின்னணி கொண்ட எம்.பி.க்கள் 19 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது 8 வழக்குகளும், ராகுல் காந்தி மீது 5 வழக்குகளும், சோனியா காந்தி மீது ஒரு வழக்கும் உள்ளது. காங்கிரஸில் அதிகப்பட்சமாக இடுக்கி எம்.பி.யான டீன் குரியாகோஸ் மீது 204 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதேபோல் திமுகவில் 7 எம்.பி.க்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதில் ஆ.ராசா மற்றும் கனிமொழி மீது அதிகப்பட்சமாக தலா 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீதும் ஒரு வழக்குப்பதிவு உள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் 3 எம்.பி.க்களும், சமாஜ்வாதி கட்சியில் 2 எம்.பி.க்களும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் எனத் தெரியவந்திருக்கின்றது. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 எம்.பி.க்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளது. தெலங்கானாவில், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் 2 எம்.பி.க்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் 8 எம்.பி.க்கள், எஸ்ஹெச்எஸ் கட்சியில் 5 எம்.பி.க்கள், லோக் ஜனசக்தி கட்சியில் 3 எம்.பி.க்கள், ஏஐடிசி கட்சியில் 4, தேசியவாத காங்கிரஸில் 2, ஐஎன்டி 2, ஏஐஎம்ஐஎம் கட்சியில் 2, சிரோமணி அகாலி தளம், ஏஐயூடிஎஃப், அப்னா தளம், தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளில் தலா ஒரு எம்பி.க்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை