#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை
சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!
அடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் !
சென்னையில் ஒலி இரைச்சலைக் கட்டுப் படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவின் இரைச்சல் நிறைந்த பெருநகரங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன.
சென்னையில் அதிகரித்து வரும் ஒலி மாசை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால் நோய்களும், மன அழுத்தமும் நிறைந்த நகரமாக சென்னை சீரழிவதை தடுக்க முடியாது.
சென்னையில் ஒலி மாசு அதிகரிப்பதற்கான காரணங்களில் முக்கியமானது வாகனங்கள் எழுப்பும் ஒலி ஆகும். சென்னை எழும்பூரில் கண் மருத்துவமனை அமைந்துள்ள இடம் அமைதிப் பகுதியாகும். அங்கு பகல் நேரத்தில் அதிகபட்சமாக 50 டெசிபல் அளவுக்கு மட்டுமே ஒலி அளவு இருக்க வேண்டும். ஆனால், சென்னையின் சராசரி அளவை விட அதிகமாக 71 டெசிபல் அளவுக்கு இரைச்சல் உள்ளது. அதற்கு மிக முக்கியக் காரணம் வாகனங்களின் இரைச்சல் ஆகும். இது கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
இது தவிர மிதிவண்டி பயணத்தை ஊக்குவித்தல், பொதுப்போக்குவரத்தை மேம்படுத்துவதன் மூலம் மகிழுந்துகளின் எண்ணிக்கையை குறைத்தல், அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பானை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் ஒலி இரைச்சலை கட்டுப்படுத்த முடியும். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் சென்னையில் ஒலி இரைச்சலைக் கட்டுப் படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை ஓர் இயக்கமாகவே நடத்த அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை