December 03, 2021 Friday 08.52 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 24 2020 10:20 PM

பெண்ணின் வலி அறிவாயோ நீ ?

Posted Date : Feb 24 2020 10:20 PM

 * பெண்ணின் வலி அறிவாயோ நீ ?  *

- அபிராமி ஜெயாபாலசுப்ரமணியன் 

 

ஒவ்வொரு உதிரப்போக்கின் போதும்
உன் காமத்தின் மிச்சங்களையும் சேர்த்தே வெளியேற்றுகின்றேன்!!
வலி அறிவாயா நீ??    

மார்புகள் கனத்து!! 
மணிவயிறு கசங்கி சுழன்று வெளியேற்றுகின்றேன்!!..
இருக்கவும் முடியாமல்
நிற்கவும் முடியாமல்..
கால் அகற்றி நடந்து கொண்டே இருக்கிறேன்...


ஒண்டிக் குடித்தனத் திண்ணையில்.. 
தீண்ட தகாத அகதியாகி போகிறேன் ...
குறுக்கே உலக்கை போடாத வீடாய் இருந்தால் தேவலை....
உருண்டாவது பிதற்றலாம் ....
வலி மட்டும்
மாறவே இல்லை!! 

உடல் முழுதும் ஒரு துர்வாடையுடன்...
இரத்தப் பிசுபிசுப்புடன் மாலைபேருந்தில் 
கால் வலிக்க நின்றுகொண்டே..
மசக்கையாவது வெளியே தெரிந்தால் 
இருக்கையோ.. இரக்கமோ கண்ணில் தென்படலாம்..

கறை நல்லது.. குழந்தைக்குதான்!!

தூப்பட்டாவிலோ முந்தானையிலோ 
மறைத்தே வீடு வந்து சேர்ந்திடவேண்டும்
வெளீர் ஆடைகளையும் விஷேசங்களையும் 
முறையே தவிர்த்திட வேண்டும்
நான் கொஞ்சும் அரும் மழையும் சேர்த்தே தான்...

மாதத்தில் 5 நாள் விடுமுறை கிட்டுமா ஏதேனும் தேசத்தில்??....

வலியையும் கறையையும் 
ஜென்மங்கள் தோறும் நான் சுமக்க...
என் சமையலையும் அதை உண்டவனின் 
அடுத்த ஜென்மத்தை பரிசுக்கிறாய்...  நீ..??


உள்ளாடை உருவி உதிரப்போக்கை 
உறுதி செய்கிறாய்!!..
மகா சபைகளில் பெண்ணின் ஆடைகளை 
உருவியே பழக்கப்பட்டவன் தானே நீ??
உன் வேதங்கள் காட்டும் சொர்க்கங்கள் 
உனக்கே வரமாய் வாய்க்கட்டும்!!


இனி உன்னை மனிதனாகவோ மிருகமாகவோ 
எப்பிறப்பிலும் ஈன நான் தயாராக இல்லை
குற்றமின்றி கூச்சமின்றி..நான்
முற்றும் மலடாகும் நாட்கள் தொலைவில் இல்லை...
 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை