#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை
சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!
அடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் !
நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. நியூஸி. வீரர் கைல் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தியா - நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து அணி. இதனால் டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 2-வது டெஸ்ட், இன்று தொடங்கியுள்ளது.
கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் இந்த முறையும் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் அஸ்வின், இஷாந்த் சர்மாவுக்குப் பதிலாக ஜடேஜா, உமேஷ் யாதவ் இடம்பெற்றார்கள்.
முதல் டெஸ்டில் நன்கு விளையாடிய மயங்க் அகர்வால், இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு பிரித்வி ஷாவும் புஜாராவும் நல்ல கூட்டணியை அமைத்தார்கள். 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் விரைவாக 54 ரன்கள் எடுத்த பிரித்வி ஷா, ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த அரை சதத்தின் மூலம் இந்திய அணியின் 3-வது தொடக்க வீரராக நிலை பெற்றுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.
நியூஸிலாந்துச் சுற்றுப்பயணத்தில் ஒரே ஒரு அரை சதமெடுத்து மோசமாக விளையாடி வரும் கேப்டன் கோலி, இன்றும் ஏமாற்றினார். அவர் 3 ரன்களில் செளதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரஹானே, 7 ரன்களில் ஆட்டமிழந்தார் . இதன்பிறகு புஜாராவும் விஹாரியும் நல்ல கூட்டணியை அமைத்து ஸ்கோரை ஏற்றினார்கள். விஹாரி, 55 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு இந்திய அணியின் சரிவை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
புஜாரா, 140 பந்துகளை எதிர்கொண்டு 54 ரன்களில் ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பேட்டிங்குக்காக அணியில் சேர்க்கப்பட்ட ரிஷப் பந்த், 12 ரன்களில் ஆட்டமிழந்தார். நியூஸி. வீரர்கள் இருமுறை கேட்சுகளைத் தவறவிட்டும் அதை ரிஷப் பந்த் பயன்படுத்திக்கொள்ளவில்லை. உமேஷ் யாதவ் ரன்கள் எடுக்காமலும் ஜடேஜா 9 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். கடைசி விக்கெட்டுக்கு ஷமியும் புஜாராவும் 26 ரன்கள் சேர்த்தார்கள். இரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்த ஷமி, போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 63 ஓவர்களில் 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜேமிசன் 5 விக்கெட்டுகளையும் செளதி, போல்ட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை