#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை
சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!
அடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் !
கிறைஸ்ட்சர்ச்;
நியூசிலாந்தில் நடந்த இந்தியாவுடனான 2 வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து தொடரை வென்றது.நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.
முதல் போட்டியில் இந்திய அணி வீழ்ந்தது. இரண்டாவது போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 242 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷமி 4, பும்ரா 3 விக்கெட் கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 7 ரன் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு பிரித்வி ஷா (14), மயங்க் அகர்வால் (3) ஏமாற்றினர். கிராண்ட்ஹோம் பந்தில் கேப்டன் கோஹ்லி (14) அவுட்டானார். ரகானே 9 ரன்கள் எடுத்தார். பவுல்ட் 'வேகத்தில்' புஜாரா (24), உமேஷ் (1) புஜரா (24) சிக்கினர். 3வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்கள் எடுத்தது.
ஜடேஜா ஆட்டமிழக்காமல் 16 ரன் சேர்த்தார். மற்றவர்கள் சோபிக்கவில்லை.முதல் இன்னிங்ஸில் 7 ரன் முன்னிலை பெற்ற நிலையில் நியூசிலாந்துக்கு 132 ரன் இலக்கு நிர்ணயித்தது இந்தியா. தொடர்ந்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி36 ஓவரில் 3 விக்கெட் இழந்து 132 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து தொடரை வென்றது.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை