March 06, 2021 Saturday 02.01 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 4 2020 9:56 AM

மருத்துவர்களை காவு வாங்கும் கொரோனா

Posted Date : Mar 4 2020 9:56 AM

சீனாவில் உருவான கொரோனா வைரசால், 3,000 பேர் உயிரிழந்துள்ளனர். 90 ஆயிரத்து-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவைத் தவிர்த்து மற்ற நாடுகளிலும் இந்த வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தென் கொரியா, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஈரான் உள்ளிட்ட, 70-க்கும் மேற்பட்ட நாடுகள், இந்த வைரசை எதிர்த்துப் போராடி வருகின்றன. சீனாவின் மவுனமே காரணம்கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து, கடந்த டிச., மாத இறுதியில், சீனாவின் வுஹான் நகர மருத்துவர் லீ வென்லியாங் எச்சரித்தார். அவரது சொன்ன எச்சரிக்கைத் தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. சீனாவின் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவர் லீயைக் கடுமையாகக் கண்டித்தனர். பின், லீயும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதன் பின் மிகத் தாமதமாக ஜனவரி மாதத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சீன அரசு வெளி உலகிற்குத் தெரிவித்தது. சீன அரசு ஆரம்பக்கட்டத்தில் மவுனமாக இருந்ததே வைரஸ் பரவல் விஸ்வரூபம் எடுக்கக் காரணமாகக் கருதப்படுகிறது.25 தலைமை மருத்துவர்கள்கொரோனாவைக் கண்டறிந்த மருத்துவர் லீ-க்கு பக்கபலமாக இருந்த மருத்துவர் மெய் ஜாங்மிங் என்பவரும் வுஹானின் ஜின்யின்டன் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று உயிரிழந்தார். கடந்த டிச., மாதம் முதல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளித்து வந்த, 25க்கும் மேற்பட்ட தலைமை மருத்துவர்களும், மருத்துவர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர்.கொரோனாவால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கும் சூழலில், அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் உயிரிழந்து வருவது, அனைவரது அச்சத்தையும் அதிகரித்து வருகிறது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை