#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை
சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!
அடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் !
கொரோனா பாதிப்பு எதிரொலியால் ஐபிஎல் போட்டிகள் தேதி மாற்றப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
பல மனித உயிர்களை பறித்து உலக மக்களை கதிகலங்க வைத்துள்ளது கொரோனா வைரஸ். இந்தியாவையும் விட்டுவைக்காத இந்த கொரோனா, இந்தியாவில் 30க்கும் மேற்பட்டோரை தாக்கியுள்ளது. நோய் தாக்குதல் அதிகரித்து வரும் சமயத்தில், அதில் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என உலக சுகாதாரத்துறை முதல் பல தரப்பினரால் வலியுறுத்தப்படுகிறது.
இந்தியாவில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிரிக்கெட் மைதானமும் ஒன்று. அதிலும் ஐபிஎல் திருவிழா என்றாலே குதூகலத்துடன் மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் இந்த முறை கொரோனா வேகமாக பரவி வருவதால் ஐபிஎல் தொடருக்கு பாதிப்பு ஏற்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
கொரோனா வீரியத்தால் மார்ச் மாத இறுதியில் தொடங்க உள்ள ஐபிஎல் தொடரின் தேதி தள்ளிவைக்கப்பட வாய்ப்புள்ளதாக பலரால் பேசப்படுகிறது. நாடு முழுவதும் பல முக்கிய நகரங்களில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண ரசிகர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இதன்மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளதால், ஒன்று ஐபிஎல் தேதியை மாற்றுவது அல்லது ஐபிஎல் தொடரை ரத்து செய்வது என்ற முடிவு எடுக்கபடலாம் எனவும் கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி, சொன்ன தேதியில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கொரோனா பரவுவதை தடுக்க பிசிசிஐ தரப்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கங்குலி உறுதிப்பட தெரிவித்துள்ளார். மேலும் உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் தடையின்றி நடைபெறுவதை குறிப்பிட்டுள்ள கங்குலி, தென் ஆப்பிரிக்க அணியும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தியா வர உள்ளதாகவும் தெரிவித்தார்.
கங்குலியின் திட்டவட்டமான பேச்சு ஐபிஎல் தொடருக்கு பாதிப்பு இருக்காது என்பது போல் தோன்றினாலும், உயிர் கொல்லியான கொரோனாவின் தாக்கத்தை பொறுத்தே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றே கூறப்படுகிறது.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை