#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை
சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!
அடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் !
சீனாவில் உருவான கொரோனா வைரஸானது இத்தாலி, இரான், ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட 176 நாடுகளையும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. ஆனால், சீனாவில், கொரோனா வைரஸால் பாதிப்படைவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.
பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துள்ளன. எனினும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது.
குறிப்பாக இத்தாலியில் இறந்தவர்களின் எண்ணிக்கையானது சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட அதிகரித்திருப்பது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இத்தகைய சூழல் உருவாக சீனாவின் வெளிப்படைத் தன்மை இல்லாமையே காரணம் என குற்றம் சாட்டினார். ``கொரோனா வைரஸானது சீனாவின் ஒரு பகுதியில் பரவத் தொடங்கியிருக்கலாம். ஆனால், அவர்களின் செயலுக்கு உலகம் தற்போது பெரிய விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறது" என்று அவர் கூறியுள்ளார். . இதேபோல ஏற்கெனவே, கொரோனா வைரஸை `சீன வைரஸ்' என்று குறிப்பிட்டும் விமர்சனத்துக்கு உள்ளானார்.
உலக சுகாதார நிறுவனமும் ட்ரம்பின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் அவசரகால திட்டத்தின் நிர்வாக இயக்குநர் மைக் ரியான் பேசும்போது, ``வைரஸ்களுக்கு எல்லைகள் எதுவும் கிடையாது. உங்களுடைய இனம், நிறம் மற்றும் வங்கியில் நீங்கள் வைத்திருக்கும் பணம் ஆகியவற்றைக் குறித்து வைரஸ்கள் கவலைப்படுவது இல்லை. எனவே, நாம் பேசும்போது கவனமாக மொழியைக் கையாள வேண்டும்" என்று ட்ரம்பின் கருத்து குறித்து கேட்டதற்குப் பதிலளித்துள்ளார்.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை