#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை
சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!
அடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் !
மும்பை:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 258 ஆக அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதுமான ஒருநாள் ஊரடங்கு நாளை பிறப்பிக்கப்படுகிறது. இதையொட்டி அதிகாலை முதல் நாளை இரவு வரை நாடு முழுவதும் ரயில்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளாவில் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 60 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், நாடு முழுவதும் 258 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதில் 39 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 52 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது.
மாநிலங்கள் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்
கேரளாவில் 7 வெளிநாட்டவர் உட்பட 40 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 24 பேர், ஹரியானாவில் 17 பேர், கர்நாடகாவில் 15 பேர், டெல்லியில் 26 பேர், ஜம்மு - காஷ்மீரில் 4 பேர், லடாக்கில் 13 பேர்,தெலங்கானாவில் 19 பேர், பஞ்சாப்பில் 2 பேர், ராஜஸ்தானில் 17 பேர், தமிழ்நாட்டில் 3 பேர்,ஆந்திராவில் 3 பேர்,குஜராத்தில் 7 பேர், ஹிமாச்சல பிரதேசத்தில் 2 பேர், மத்தியப் பிரதேசத்தில் 4 பேர், ஒடிசாவில் 2 பேர், உத்தரகண்டில் 3 பேர்,மேற்கு வங்கத்தில் 2 பேர் என கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சட்டிஸ்கர், சண்டிகர், புதுச்சேரி, ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ளது. மேலும் டெல்லியில் 5 பேர்,கர்நாடகாவில் ஒருவர், கேரளாவில் 3 பேர், ராஜஸ்தானில் 3 பேர், உத்தரப்பிரதேசத்தில் 9 பேர், தமிழகத்தில் ஒருவர், தெலங்கானாவில் ஒருவர் என மொத்தம் 23 பேர் கொரோனா வைரஸ் பிடியில் இருந்து குணப்படுத்தப்பட்டுள்ளனர்.
பலி 4 மட்டுமே:
இதனிடையே டெல்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இத்தாலி நாட்டவர் ஒருவர் கொரோனா சிகிச்சையில் நேற்று முன்தினம் இறந்ததாக தகவல் வெளியானது. ஆனால் அவர் சிகிச்சையில் குணமடைந்த பின், திடீர் மாரடைப்பால் இறந்ததாகவும், இதனால் இதை கொரோனா பலியாக கருத முடியாது என்றும் மத்திய சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை