#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை
சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!
அடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் !
சாத்தூரில் வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலையில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே இருந்து ஆண் சடலம் ஒன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டது. இதனால் பலி எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிப்பிப்பாறையில் நேற்று நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பட்டாசு ஆலை கட்டிட இடிபாடுகளில் சிக்கி குருசாமி (50) என்பவரது உடலை ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வெடி விபத்தில் மொத்த பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தூர் அருகே உள்ள வெள்ளையாபுரத்தைச் சேர்ந்த கணேசனுக்குச் சொந்தமான பட்டாசு ஆலை சிப்பிப்பாறை அருகே செயல்படுகிறது. உரிமம் பெற்ற இந்த ஆலையில் நேற்று வழக்கம்போல் பட்டாசு உற்பத்தி யில் 30-க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, சட்டவிரோதமாக தயாரித்த பேன்ஸி ரக பட்டாசு வெடி மருந்துகளில் உராய்வு ஏற்பட்டதால் திடீரென வெடித்து தீப்பற்றியது.
இந்த தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியதால் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. ஆலையில் இருந்த 13-க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து தரை மட்டமாயின.
இந்த விபத்தில் பணியில் இருந்த தென்காசி மாவட்டம் மைப் பாறையைச் சேர்ந்த ராணி (42), ஜெயபாரதி (45), பத்ரகாளி (33), வேலுத்தாய் (34), தாமரைச்செல்வி (32) தங்கம்மாள் (39) ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தனர். சங்குப்பட்டியைச் சேர்ந்த முருகையா (57), சுப்பிரமணியன் (60), பொன்னுத்தாய் (48), சுப்பம்மாள் (60), அய்யம்மாள் (62), மாடசாமி (25), பேச்சியம்மாள் (49), முருகலட்சுமி (37), ஜெயராம் (57) ஆகிய 9 பேரும் பலத்த காயமடைந்தனர்.
மேலும் மூவர் கவலைக்கிடம்..
நேற்றைய விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனை, மூவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் இருவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மூவரும் 100% தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை