#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை
சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!
அடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் !
டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த வழக்கின் குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் ஆகிய 4 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு தூக்குத் தண்டனை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஏழு வருடத்திற்கு பிறகு நேற்று அதிகாலை 5.30 மணியளவில் 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. சுமார் முப்பது நிமிடங்கள் அவரது உடல்கள் தூக்கில் தொங்கவிடப்பட்டு, பின்னர் இறந்துவிட்டனரா என மருத்துவர்களால் ஆய்வு செய்யப்பட்ட பின்னர் அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்நிலையில் திஹார் சிறையின் மூத்த அதிகாரி கூறுகையில், பிரேத பரிசோதனைக்கு பிறகு குற்றவாளியின் உடல்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குற்றவாளி அக்சயின் உடலை அவரது உறவினர்கள் பீகார் அவுரங்காபாத் அருகேயுள்ள கிராமத்துக்குக் கொண்டு சென்றனர். முகேஷின் உடலை பெற்றோர்கள் ராஜஸ்தான் மாநிலத்துக்குக் கொண்டு சென்றனர். வினய் குமார், பவன் குப்தா உடல்கள் தெற்கு டெல்லி, ரவிதாஸ் கேம்ப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இவர்களில் குற்றவாளி முகேஷ் சிறை கண்காணிப்பாளரிடம் தூக்கிலிடுவதற்கு முன்பாக தனது உடல் உறுப்புகள் அனைத்தையும் தானமாக வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். வினய் குமார் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு முன், சிறையில் தான் வரைந்த ஓவியங்களில் அனுமன் மந்திரம் தொடர்பான ஓவியத்தை சிறைக் கண்காணிப்பாளருக்கும், மற்றொரு ஓவியத்தைத் தனது குடும்பத்தினருக்கும் வழங்க விரும்புவதாக கூறியுள்ளார்.
ஆனால் பவன் குப்தா, அக்சய் குமார் இருவரும் தங்களின் கடைசி ஆசைகளை கூறாமலேயே தூக்கு மேடைக்கு சென்றனர் என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை