April 06, 2020 Monday 06.17 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 25 2020 10:28 AM

கொரோனா வைரஸ் : இந்தியாவில் 562 பேருக்கு வைரஸ் பாதிப்பு : 11 பேர் பலி !

Posted Date : Mar 25 2020 10:28 AM

டெல்லி:

உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 4,22,566-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உலகளவில் 18,907 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் 11 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 562ஐ தாண்டி உள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கிடையே, கடந்த 22ம் தேதி, நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி வலியுறுத்தினார். அன்றைய நாள், நாடு முழுவதும் அனைத்து கடைகளும், நிறுவனங்களும் மூடப்பட்டன. பஸ், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த ஏப்ரல் 21-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை