April 06, 2020 Monday 08.10 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 25 2020 11:38 AM

அரசு ஊழியர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்காக சென்னையில் 200 பேருந்துகள் இயக்கம் !

Posted Date : Mar 25 2020 11:38 AM

சென்னையில் அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்காக 200 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு 12 முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்,

தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதுமே போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், அத்தியாவசியப் பணிகளில், அவசரப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்காக 200 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில் தாம்பரம், கூடுவாஞ்சேரி, பூந்தமல்லி, மணலி, நெற்குன்றம், தேனாம்பேட்டை, துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை