April 06, 2020 Monday 08.08 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 25 2020 3:09 PM

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி ! - தமிழக அரசு

Posted Date : Mar 25 2020 3:09 PM

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதுமே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பிற்கு அனைத்து தேர்வுகளும் முடிவடைந்த நிலையில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை