June 05, 2020 Friday 05.54 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 26 2020 9:54 AM

ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு - அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Posted Date : Mar 26 2020 9:54 AM

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, தொழிலாளர் நலனுக்காக ரூபாய் 1.70 லட்சம் கோடிக்கான சலுகை தொகுப்பை அறிவித்தார்.


உஜ்வாலா திட்டத்தில் பெண்களுக்கு மூன்று மாதம் கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கபப்டும். மத்திய அரசின் அறிவிப்பால் 8 கோடி பெண்கள் பயனடைவார்கள். ஜன்தன் வங்கிக்கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு மூன்று மாதத்துக்கு தலா ரூபாய் 500 வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள பெண்களுக்கான கடன் ரூபாய் 10 லட்சத்தில் இருந்து ரூபாய் 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

100 பேருக்கு குறைவான ஊழியரை கொண்ட நிறுவனம், ஊழியர்கள் மூன்று மாதத்துக்கு வருங்கால வைப்பு நிதி செலுத்த தேவையில்லை; மத்திய அரசே மூன்று மாதத்துக்கு பி.எப் தொகையை செலுத்தும். மாத ஊதியம் ரூபாய் 15 ஆயிரத்துக்கு கீழ் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே சலுகை பொருந்தும்.

பி.எப் வைப்பு நிதியில் மூன்று மாத ஊதிய அளவோ அல்லது 75% சதவிகிதத்தையோ முன்பணமாக பெறலாம். முன் பணத்தை திரும்ப செலுத்த தேவையில்லை; இதற்காக பி.எப்.விதியில் திருத்தம் கொண்டு வரப்படும். கட்டடத் தொழிலாளர்களுக்கு நல நிதியிலிருந்து, அவர்களுக்கு தேவையான உதவியை மாநில அரசுகள் செய்து தரலாம்" இவ்வாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

 "கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக ரூபாய் 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூபாய் 50 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு. 80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசி அல்லது 5 கிலோ கோதுமை மூன்று மாதத்துக்கு கூடுதலாக வழங்கப்படும். ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும்.

ஊரடங்கு காலத்தில் ஏழைகள் யாரும் உணவின்றி தவிக்கக் கூடாது என்பதில் அரசு உற்பத்தியாக உள்ளது. பிரதமரின் கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தரப்படும் ரூபாய் 6 ஆயிரத்தில் ரூபாய் 2 ஆயிரம் முன்கூட்டியே விவசாயிகளுக்கு வழங்கப்படும். 8.69 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தால் பயனடைவர். 100 நாள் வேலைத் திட்ட ஊழியர்களுக்கான ஊதியம் ரூபாய் 182 லிருந்து ரூபாய் 200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதியவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 1,000 வழங்கப்படும். இந்த உதவித்தொகை இரண்டு தவணைகளாக மூன்று மாதங்களில் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்." இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை