May 30, 2020 Saturday 12.14 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 28 2020 5:51 AM

இந்தியா : கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 834 லிருந்து 873 ஆக அதிகரிப்பு

Posted Date : Mar 28 2020 5:51 AM

புதுடில்லி:

இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 834 லிருந்து 873 ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் 24 மணி நேரத்தில் 149 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 873 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 19 ஆக உயர்ந்துள்ளது. அதில் 79 பேர் சிகிச்சைக்கு பின் குணமாகினர். எஞ்சியவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 180 பேரும், கேரளாவில் 173 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் காரணமாக மஹாராஷ்டிராவில் 4 பேரும், குஜராத்தில் 3 பேரும், கர்நாடகாவில் 2 பேரும், ம.பி., தமிழகம், பீஹார், பஞ்சாப், டில்லி, மேற்கு வங்கம், காஷ்மீர், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை