May 30, 2020 Saturday 02.08 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Apr 3 2020 7:05 AM

ஹரியானா : கொரோனா பரவ வாய்ப்புள்ளது என " சுவிங்கம் " விற்க வாங்க தடை !

Posted Date : Apr 3 2020 7:05 AM

தற்போது இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பும் , பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2301 ஆக உள்ளது. 157 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் தொற்று வைரசான கொரோனாவிடம் இருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்
என்றும், சமூக விலகல் வேண்டும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. அதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.


கொரோனா பரவ வாய்ப்புள்ளது எனக்கூறி ஹரியானா அரசு சுவிங்கம்மை ஜூன் 30ம் தேதி வரை தடை செய்துள்ளது. அதன்படி ஜூன் 30வரை சுவிங்கம்மை விற்கவோ வாங்கி சுவைக்கவோ கூடாது என குறிப்பிட்டுள்ளது. ஆங்காங்கே துப்பப்படும் சுவிங்கம்மால் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக ஹரியானா அரசு குறிப்பிட்டுள்ளது. அதேபோல் குட்கா, பான்மசாலா போன்றவற்றின் மீது போடப்பட்டுள்ள தடையை உறுதி செய்து விற்பனையைத் தடுக்க உரிய நடவடிக்கை வேண்டுமென்றும் ஹரியானா அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை