August 04, 2020 Tuesday 07.35 AM
Newsletter Home

சற்றுமுன்

யுவன் முத்து
Posted Date : Jun 20 2020 6:26 AM

கொரானா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் -முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி !

Posted Date : Jun 20 2020 6:26 AM

சென்னை :

வேளச்சேரி குருநானக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தார் முதல்வர் பழனிசாமி. பின்பு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ; கொரோனா பரவலை தடுக்கும் முயற்சிக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

கொரோனா பரவலைத் தடுக்கவே பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது, மக்களை சிரமப்படுத்த அல்ல. கொரோனாவை தடுக்கவே. கொரானா எப்போ ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்.

இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் தான் இதுவரை 8 லட்சத்து 27 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டிலேயே அதிகமாக தமிழகத்தில்தான் 83 பரிசோதனை மையங்கள் உள்ளன.

தற்போது நாள்தோறும் கூடுதலாக பரிசோதனையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 23,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தயவு கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன். 

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 80 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் ஏதும் தெரிவதில்லை. 20 சதவீதம் பேருக்கு மட்டுமே அறிகுறி தெறிகிறது. அதிலும் 7 சதவீதம் பேருக்குத்தான் தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை என்று பதில் அளித்துள்ளார்.

அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு, "இல்லை, தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று அமைச்சர் அன்பழகனே மறுத்துள்ளார்" என்றும் முதல்வர் விளக்கம் அளித்தார்.

Comments Here

 • Manithan Jul 04,2020 | 06:27 AM

  "கொரோனா" தொற்று பாதித்தவர்களுக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள "ஜவஹர்" பொறியியல் கல்லூரியில் அரசு அனுமதியுடன் இலவச சித்த மருத்துவம் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை சித்த மரு திரு.வீரபபாபு தலைமையி

 • Manithan Jun 25,2020 | 02:03 PM

  திருச்சிராப்பள்ளி இருங்களூர் எஸ். ஆர். எம் மெடிக்கல் ஹாஸ்பிடல் & ரிசர்ச் இன்ஸ்ட்யூட் ஆம்புலன்ஸ் ஆள் நடமாட்டம் இல்லாத கிராமப் பகுதியில் ஒரு ஆம்புலன்ஸ் வந்து நிற்கின்றது. ஆம்புலன்ஸ் நிற்கக்கூடிய பகுதியா

 • Manithan Jun 25,2020 | 01:35 PM

  பாசிசபாஜக ஆட்சிஒழிக-கார்ட்டூனிஸ்ட் பாலா சாத்தான்குளம் காவல் நிலைய காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட பென்னிக்ஸ் மூச்சு திணறலாலும் ஜெயராஜ் உடல் நலக்குறைவாலும் இறந்ததாக முதல்வர் பழனிசாமி சொன்னதில் எந்த ஆ

 • Manithan Jun 22,2020 | 05:15 AM

  News Weather Traffic Live Stream Investigates Sports About Us Family Focus Contact Us Log In / Register log in to manage your profile and account Create yo

 • Manithan Jun 20,2020 | 08:35 AM

  அடேய் இந்த நாடு எங்கடா போயிட்டு இருக்கு ? மத்திய மாநில அரசுகளின் கடமையை செய்யவில்லை என்று சுட்டிக் காட்டியதற்கு. இந்த தண்டனையா ? இது நீதிமன்றமா ? இல்லை , எச்ச ராஜா சொன்னது போல் மன்றமா ? அரசாங்கத்தின்

 • Manithan Jun 20,2020 | 08:12 AM

  விழித்திடு தமிழா..........சிந்திப்பீர்........! மதுவால் ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் மக்கள் இறக்கிறார்கள்.
 https://bit.ly/2SRRPbw துரித உணவுகளால் ஒவ்வொரு ஆண்டும் 1.1 கோடி மக்கள் இறக்கிறார்கள். 
https://