August 04, 2020 Tuesday 08.09 AM
Newsletter Home

சற்றுமுன்

யுவன் முத்து
Posted Date : Jun 22 2020 5:46 AM

உடுமலை சங்கர் ஆணவக் கொலை : கௌசல்யாவின் தந்தை விடுதலை ! தூக்குத் தண்டனை ரத்து

Posted Date : Jun 22 2020 5:46 AM

சென்னை: உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து, விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளது.

இந்த கொலை வழக்கில் ஐந்து பேருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.

உடுமலை சங்கர் கொலை வழக்கில், 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உடுமலை சங்கர் கொலையின் பின்னணி : 


திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சோந்த சங்கா், அவரது மனைவி கௌசல்யா ஆகியோா் மீது கடந்த 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில், சங்கா் பலியானாா். இந்த வழக்கை விசாரித்த திருப்பூா் மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, பழநி எம். மணிகண்டன், பி.செல்வக்குமாா், தமிழ் என்ற கலை தமிழ்வாணன், மதன் என்ற மைக்கேல், ஜெகதீசன் உள்ளிட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனையும், தன்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் தீா்ப்பளித்தது.

மேலும், இந்த வழக்கிலிருந்து கௌசல்யாவின் தாயாா் அன்னலட்சுமி, அவரது உறவினா் பாண்டித்துரை, கல்லூரி மாணவா் பிரசன்னகுமாா் ஆகியோா் விடுதலை செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கௌல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 6 பேர் , ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தன்ராஜ், 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட மணிகண்டன் ஆகிய 8 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா். இந்தத் தண்டனையை உறுதி செய்யக் கோரியும், வழக்கில் விடுதலை செய்யப்பட்டவா்களுக்கு தண்டனை வழங்கக் கோரியும் போலீஸாா் தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்குகள் அனைத்தையும், நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிா்மல்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வந்தனா். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில், இன்று தீர்ப்பளித்துள்ளனர்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை