August 04, 2020 Tuesday 08.02 AM
Newsletter Home

சற்றுமுன்

யுவன் முத்து
Posted Date : Jun 24 2020 4:26 AM

சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் : சந்தேகத்தை கிளப்பும் முதல் தகவல் அறிக்கை !

Posted Date : Jun 24 2020 4:26 AM


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 55). இவருடைய மகன் பென்னிக்ஸ் (31). இவர்கள் சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த 19 ம் தேதியன்று கடைகளை குறித்த நேரத்தில் அடைப்பது தொடர்பாக காவல் துறையினர் சிலருக்கும், பென்னீக்ஸுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, பென்னீக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இது பற்றி விளக்கம் கேட்ட பென்னிக்சின் தந்தை மீதும் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்து கடந்த 21ம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் தான் கிளைச்சிறையில் கைதிகளாக இருந்த தந்தையும் மகனும் அடுத்தடுத்து உயிரிழந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் அதிர்ந்த உறவினர்கள், நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை அத்துமீறலுக்கு கணவரையும், மகனையும் பலிகொடுத்த செல்வராணி கண்ணீர் வடித்தார்.

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட வியாபாரிகள் இருவர், சிறைச்சாலையில் உயிரிழந்தது வியாபாரிகளை கொந்தளிக்க வைத்துள்ளது. நெஞ்சுவலி காரணமாக இருவரும் உயிரிழந்ததாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும், இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கோரி சாத்தான் குளத்தில் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், சாத்தான் குளம் காவல் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் அவசர அவசரமாக ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிபாரிகளுடன் சாத்தான்குளத்தில் பேச்சுவார்த்தை நடத்திய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

வியாபாரிகள், உறவினர்கள் என ஒருபக்கம் நீதிக்கேட்டு போராடிய நிலையில், இருவரின் சடலங்கள் வைக்கப்பட்ட பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார் மாஜிஸ்திரேட் பாரதிதாசன்.இவ்விவகாரத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்துள்ளதுடன், இன்று விசாரணை நடத்த உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ரகுகணேஷ் 19ஆம் தேதி இரவு 9.15 மணியளவில் பணியில் இருந்த போது, சாத்தான்குளம் தலைமை காவலர் முருகன் தன்னிடம் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார். அந்தப் புகாரில், சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே முருகனும், காவலர் முத்துராஜ் என்பவரும் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு செல்போன் கடை நடத்தி வரும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னீஸ் பொதுமுடக்க விதியை மீறி சிலருடன் கடை முன்பு நின்றுகொண்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

பின்னர் தாங்கள் அறிவுறுத்தியதால் மற்றவர்கள் வீட்டிற்கு செல்ல, ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் மட்டும் வீட்டிற்கு செல்லாமல் தகாத வார்த்தைகளில் திட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தரையில் அமர்ந்து கொண்டு,புரண்டனர். இதில் அவர்களுக்கு ஊமைக் காயம் ஏற்பட்டதாகவும்,ஊரடங்கு அமலில் உள்ளதால் நாங்கள் மீண்டும் நேரம் ஆகிவிட்டது. கலைந்து செல்லுங்கள் என சொன்னதற்கு, கலைந்து போக சொன்னால் உங்களை அடித்துக் கொன்றுவிடுவோம் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.மேற்படி இதனால் தங்களை அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, தகாத வார்த்தைகளிலும் திட்டடியதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.அதன்படி, ஜெயராஜ் மற்றும் பொன்னீஸ் மீது காவல்நிலைய குற்ற எண் 312/2020 யு/எஸ் 188, 269, 294 (பி), 353, 506 (ii) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments Here

  • Selvam Jun 27,2020 | 07:58 AM

    They are India's, George Floyd... They don't know what for they died... Humans dead... An only human being is available.

  • Manithan Jun 25,2020 | 01:48 PM

    #அரசு செயலிழந்த போதெல்லாம் லத்தியும் துப்பாக்கியுமே அதைத் தூக்கி நிறுத்துகிறது!

  • Manithan Jun 25,2020 | 01:46 PM

    தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரனையின் போது கொல்லப்பட்ட அப்பாவி தந்தை மகன் மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்பாட்டம் நடத்திய ஆலங்குலம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளை காவல்துறை கைது செய

  • Manithan Jun 25,2020 | 01:32 PM

    இந்த வெறி பிடித்த காவாலி நாய்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் நாளை நானாக இருக்கலாம் நீங்களாக இருக்கலாம் நம் உயிரை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் ஒரு சமயம் இதேபோல் நிகழ்வு நமக்கு ஏற்பட்டால் கு

  • manaithan Jun 25,2020 | 06:04 AM

    France: trust in fruit and vegetables back (June 25, 2020/Source: Vegetable.fr) The 6th edition of the Confidence Barometer, jointly funded by Franceagrimer and Interfel and produced by the CSA Instit

  • manithan Jun 25,2020 | 06:01 AM

    The board of the small farmers association is for a PDM ban initiative and supports the "Initiative for a Switzerland without synthetic pesticides". As the Agricultural Information Service Lid reports

  • manithan Jun 25,2020 | 06:00 AM

    France: trust in fruit and vegetables back (June 25, 2020 Source: Vegetable.fr) The 6th edition of the Confidence Barometer, jointly funded by Franceagrimer and Interfel and produced by the CSA Instit

  • manithan Jun 25,2020 | 05:59 AM

    Smallholder Association supports "Initiative for a Switzerland without synthetic pesticides" June 25, 2020 (Source: Lid.ch) The association is convinced that agriculture in Switzerland and worldwide m

  • manithan Jun 24,2020 | 05:40 PM

    Shouldn't DGP Tripathy IPS tender an unconditional apology to the people of TN for the behaviours of his sick police in sathangulam? Shouldn't he arrest them immediately? If he fails to do these, it m