September 28, 2021 Tuesday 11.06 PM
Newsletter Home

சற்றுமுன்

யுவன் முத்து
Posted Date : Sep 4 2020 10:26 PM

கனவுகளை கலைக்கும் அலாரங்கள்  -!

Posted Date : Sep 4 2020 10:26 PM

வலைகள் முழுதும் வியாபித்து விரைகின்றன 
விவரங்களும் விவாதங்களும்
பயணங்கள் திசைமாறிக்கொண்டே....
துடுப்பு என்னிடமும் இல்லை..
உன்னிடமும் இல்லை!!...

யாருக்கோ யாரோ குரல் கொடுக்கிறார்கள்..
நீயும் நானும் கைதூக்கியே ஆகவேண்டும்...
 பகிர்ந்ததோ..புரிந்ததோ.. 
கடத்தியே ஆகவேண்டும்!!...

கணினியின் 
அத்துனை வடிவங்ளையும் கைகளில் தினித்துவிட்டு..
வாழ்வென்பது கடினம் என்று தினமும் இரைந்து கற்பிக்கிறோம் மழழைக்கு!!..

யாரை யாரிமிருந்து மீட்பது??
பயிற்சி வகுப்புகள் பலநூறு ரூபாய்க்கு!!
தேநீரை தனியாக ருசித்து நாளாயிற்று!!.
திரை வெறித்தே தூக்கம் தொலைகிறது!!...

இறையும் இயற்கையும் கூட ஏதோ 
இயக்கதிற்குள் ஒடுங்கிவிட்டனர்!!
தீரா தர்கம் நடந்து கொண்டே இருக்கிறது..
 அவர்களை விடுவிக்க!!

மழையும் மண்வாசனையும் ரசித்து நகர முடியாது!!
பதிவு செய்திடல்
வேண்டும்!!
இனி இரவுகளில் கதைக்க நம்மிடம்
எதுவும் இல்லை!!
காதோரம் கிசுகிசுப்பதையும் கைகொட்டி சிரிதாயிற்று!!

ஜீவன் போனபின்னும் உலாவும் உன் சிந்தனை...
அதுவே முக்தி..
அதுவே அமரதுவம்...
 என்று கற்பிக்கபடலாம்!!
பின்னர்
திருடப்படலாம்!!
எள்ளி நகைக்கபடலாம்!!
சுக்குநூறாக உடைக்கபடலாம்!!
பொதுவுடமை  அல்லவா??
எதுவும் இனி உனதல்ல!!...
உன் நேரம் உள்பட!! 
கனவுகளை கலைக்கும் அலாரங்கள் 
உன் தலைமாட்டில்!!

வெளியேறி விடாதே..
மட்டமாய்  சுயநலம் கொண்ட முட்டாளாய் எதிர்க்கப்படுவாய்....


- அபிராமி 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை