November 27, 2020 Friday 07.59 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Sep 7 2020 8:53 AM

# ஹிந்தி தெரியாது போடா/ ஹிந்தி மொழி உருவான வரலாறு, ஹிந்தி திணிப்பை தமிழர்கள் எதிர்ப்பது ஏன் ?

Posted Date : Sep 7 2020 8:53 AM


        ஹிந்தி தெரியாது போடா என்ற வாசகம் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் மட்டுமல்லாது உலக அளவில் முக்கியமான பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்தி திணிப்பு என்பது இன்று மட்டுமல்ல தொன்றுதொட்டு மத்தியில் ஆளும் கட்சிகள் புகுத்தி  வருகிறார்கள். அதற்கு எதிராக தமிழகத்தில் பல போராட்டங்களும், உயிரிழப்புகளும் நடந்த வண்ணம் தான் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் ஹிந்தி என்ற மொழி எப்போது உருவானது , அதன் வரலாறு என்ன என்பதையும், ஹிந்தி திணிப்புக்கான அரசியலையும் பற்றி பார்ப்போம் . 

200 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டமைக்கப்பட்ட மொழியே ஹிந்தி !!
      இந்தியாவின் வடக்கில் பல்வேறு நாட்டினை சேர்ந்த மக்கள் வணிக ரீதியாகவும், வாழ்வியல் ரீதியாகவும் வசித்து வந்தனர். பாரசீகர்கள், ஆப்கானியர்கள், துருக்கியர்கள் போன்ற பலரும் வட இந்தியாவில் வசித்து வந்தனர். அங்கே  கடிபோலி , பெங்காலி, மாராட்டியம் என பல மொழிகள் பேச்சு வழக்கில் இருந்தது. இதனால் ஆங்கிலேயர்கள் மக்களிடைய நல்ல தொடர்பை உண்டாக்க ஒரு மொழியை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டனர்.அச்சமயத்தில் ஜான் கில்கிறிஸ்ட் என்ற  ஸ்காட்லாண்ட்  நாட்டை சேர்ந்த மொழி ஆராய்ச்சியாளர் இந்தியாவின் மொழிகளை பற்றி பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தார். 
        ஜான் கில்கிறிஸ்ட் வட இந்தியாவில் எல்லோரும் பேச ஒரு பொது மொழி வேண்டுமென தீர்மானித்தார். அதற்கு பின்பாக கடிபோலி என்ற மொழியிலிருந்து ஒரு மொழியை உருவாக்க முடிவுசெய்தார். கலிபோலி என்பது டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள மக்களால் பேசப்பட்டுவந்த ஒரு மொழி. கடிபோலி மொழியுடன் சமஸ்கிருதத்தை கலந்து ஹிந்தி என்ற இரு மொழியை உருவாக்கினார். கடிபோலி மொழியுடன் பாரசீகத்தை கலந்து உருது என்ற இரு மொழியை உருவாக்கினார். 
 கடிபோலி + சமஸ்கிருதம்= ஹிந்தி 
 கடிபோலி+பாரசீகம் = உருது

இன்டஸ் மக்களை - `சிந்து' நதிக்கு கிழக்கே வாழும் மக்களை - குறிப்பிடுவதற்கு `இந்தி' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த வார்த்தைக்கான வேர் பெர்சிய மொழியில் உள்ளது. பெர்சிய மொழியில் `இந்தி' என்பது இப்போதைய `இந்தியர்' என்பதைக் குறிப்பதாக உள்ளது.


       கல்கத்தாவில் உள்ள வில்லியம் ஜார்ஜ் கோட்டையில் வைத்து தான் ஜான் கில்கிறிஸ்ட் ஹிந்தி மொழியை உருவாக்கினார். இதில் வேடிக்கை என்னவென்றால் ஹிந்தியை தாய் மொழியாக கொண்ட எந்த ஒரு மாநிலங்களும் அவற்றை முதலில் படிக்கவில்லை. ஜான் கில்கிறிஸ்ட் ஹிந்தியை கற்க ஓரெண்டல் செமினரி என்ற ஒரு கல்லூரியை உருவாக்கினார். அதில் பல்வேறு எழுத்தாளர்களும், அறிஞர்களையும் வைத்து ஹிந்தி கற்பிக்கப்பட்டது. ஹிந்தி என்ற மொழியை எளிதில் பரப்ப அவர்கள் செய்த முதல் முயற்சி இது தான். அதாவது தேர்ந்த அறிஞர்கள் மூலம் மொழியை கற்பிக்கும் போது அது வேகமாக வட மாவட்டங்களில் பரப்பட்டது. அதற்கு பிறகு ஜான் கில்கிறிஸ்ட் ஹிந்தியும் ஆங்கில இலக்கியமும் என்ற புத்தகத்தை 1800 ஆண்டுகளில் வெளியிட்டார். அவை வடமாநிலங்கள் முழுவதும் கொண்டு சேர்க்கப்பட்டது. பிறகு காலப்போக்கில்  மகாராஷ்ட்ரா, உத்திர பிரதேசம், பீகார் போன்ற பகுதியில் அவர்கள் பேசி வந்த தாய் மொழி அழிக்கப்பட்டு ஹிந்தி தாய் மொழியாக மாறியது. இந்தியா சுதந்திரம் அடைந்தபின் நேரு ஹிந்துஸ்தானி மொழி இன்றை இந்தியாவின் அலுவல் மொழியாக்க முயன்றார். அதனால் ஹிந்தி அலுவல் மொழி ஆனது. ஆனால் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் தான் ஆட்சி மொழி என அறிவித்தது. இந்தியாவிலிருந்து பிரிந்த பாக்கிஸ்தான் உருதை தேசிய மொழியாக அறிவித்தது. 

தொன்று தொட்டு தமிழர்கள் ஹிந்தி திணிப்பை ஏன் எதிர்க்கிறார்கள்? 
       

       இந்தியாவின் தொன்மையான ஒரு மொழி பேசிபவர்களிடையே வெறும் 200 வருடங்களே வரலாறு கொண்ட ஒரு மொழியை ஆட்சிமொழியாக்க  மத்தியில் ஆளும் கட்சிகள் முயற்சித்தன. 1937 ஆம் ஆண்டில் காங்கிரஸின் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் தமிழகத்தை ராஜாஜி ஆண்டு வந்தார். அப்போது கட்டாயமாக ஹிந்தி படிக்க வேண்டும் என திட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதனை பெரியாரின் நீதி கட்சி வன்மையாக எதிர்த்தது. பின்பு 1965ல் திராவிட கட்சிகளால் மாணவர்களுக்கான ஹிந்தி திணிப்பு போராட்டமாக உருவெடுத்தது. 

   இந்த போராட்டத்தில் பல்வேறு கணக்கான மாணவர்கள் பங்குபெற்று சிலர் தங்கள் உயிரையும் மாய்த்து கொண்டனர். அதற்கு பின்பு ராஜிவ் காந்தி அந்த திட்டத்தை  கைவிட்டார். காலப்போக்கில் ஹிந்தியை தமிழகத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் திணிக்க  பலரும் முயன்றனர், ஆனால் ஒவ்வொரு முறையும் தமிழகம் அவற்றை எதிர்த்து போராடி வருவது குறிப்பிடத்தக்கது. 

--சிபி சரவணன் 

        

        
 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை