October 20, 2020 Tuesday 10.19 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Sep 11 2020 5:41 AM

4 வயது சிறுவன் தண்ணீர் டேங்கர் லாரி மோதி உயிரிழப்பு

Posted Date : Sep 11 2020 5:41 AM

சென்னை: 

சென்னை பட்டினம்பாக்கம் அருகே தண்ணீர் டேங்கர் லாரி மோதியதில் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்டினம்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை காலை சிக்னலில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது, கட்டுப்பாடின்றி வந்த தண்ணீர் டேங்கர் லாரி மோதியது. இதில், தனது தாத்தாவுடன் சென்றுகொண்டிருந்த தரமணியைச் சேர்ந்த பிரணீஷ் என்ற 4 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். 3 பேர் காயமடைந்தனர். சிக்னல் கம்பங்கள், வாகனங்கள் சேதமடைந்துள்ளன..

விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுவனையும் காயமடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

தண்ணீர் லாரிகளுக்கு நேரக்கட்டுப்பாடு வேகக்கட்டுப்பாடு வேண்டும் என்று கூறி பல பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுள்ளது. உயர்நீதிமன்றமும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்றாலும் தண்ணீர் லாரி ஓட்டுநர்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றுவதில்லை

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை