September 29, 2020 Tuesday 10.04 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Sep 15 2020 10:58 AM

மாணவர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் சூர்யா - பாஜக மூத்த தலைவர்கள் கடும் கண்டனம்

Posted Date : Sep 15 2020 10:58 AM

 நீட் தேர்வு குறித்த பயத்தால் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடிகர் சூர்யா நீட் தேர்வை விமர்சித்து காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.


இதற்கு பாஜகவினரும், நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசுவோரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வானதி சீனிவாசன், சினிமாவில் வசனம் பேசுவதை போல மாணவர்களின் வாழ்க்கையில் சூர்யா விளையாட வேண்டாம். மாணவர்களின் தற்கொலையை தொடர்ந்து போட்டி தேர்வுகளே கூடாது என்பது போல சூர்யா பேசிகிறார் என தெரிவித்துள்ளார்.

இதேப்போல்  , நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யா உட்பட யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று பாஜக மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் முருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், வரும் 17-ம் தேதி பிரதமர் மோடியின் பிறந்தநாளை மரக்கன்று நடுதல், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் மாநிலம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்துள்ளதாகக் கூறினார். நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் உயிருடனும், உணர்வுகளுடனும் விளையாடக் கூடாது என்றும், அரசியல் லாபத்துக்காக மாணவர்களை தூண்டிவிடுவதை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் முருகன் கூறினார்.


2G-ல் ஊழல் செய்வதையே சிந்தனையாகக் கொண்டிருந்ததால், காங். - திமுக கூட்டணி அரசின் போது நீட் தேர்வுக்கு திமுக வாய்திறக்கவில்லை என்று குற்றம் சாட்டிய முருகன், நீட் தேர்வு விவகாரத்தில் ஸ்டாலின், நடிகர் சூர்யா உள்ளிட்ட யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் கூறினார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை