October 29, 2020 Thursday 09.22 PM
Newsletter Home

சற்றுமுன்

யுவன் முத்து
Posted Date : Sep 23 2020 7:10 AM

இந்தியாவின் கடன் சுமை இவ்வளவு கோடியா ? - வல்லரசு கனவு பலிக்குமா ?

Posted Date : Sep 23 2020 7:10 AM

இந்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்ட காலாண்டு அறிக்கையில், இந்திய அரசின் கடன் படிப்படியாக உயர்ந்து வந்திருப்பதும், அது நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா சூழலால் இந்த அளவு கடன் வாங்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக மொத்த கடன் அளவு நூறு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

மார்ச் இறுதியில் 94.6 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன் அளவு ஜூன் இறுதியில் 101.3 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதே காலகட்டத்தில் கடந்தாண்டு, அதாவது ஜூன் 2019ஆம் ஆண்டு ரூபாய் 88.18 லட்சம் கோடியாக இருந்தது.

இடைக்கால மதிப்பீட்டீன் கீழ் தொழில்துறை வங்கிகள் 39 சதவீதமும், காப்பீட்டு நிறுவனங்கள் 26.2 சதவீதமும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2020 ஏப்ரல்-ஜூன் முழுவதும் பண நிர்வாக விலைப்பட்டியல் வழங்கியதின் மூலம் மத்திய அரசு ரூ.80,000 கோடியை திரட்டியது. 2021 நிதி ஆண்டின் இறுதியில் கடன் அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதத்தை தொடும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடன்கள் வாங்கியதற்காக இந்திய அரசு வழங்கியுள்ள பத்திரங்களில், 28.6% பத்திரங்களுக்கான கால வரையறை ஐந்து ஆண்டுகளை விடவும் குறைவு. இந்த பத்திரங்களில் 39% வங்கிகளிடமும், 26.2% காப்பீட்டு நிறுவனங்களிடமும் உள்ளன என்கிறது அரசின் அறிக்கை.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை