October 29, 2020 Thursday 10.54 PM
Newsletter Home

சற்றுமுன்

யுவன் முத்து
Posted Date : Sep 24 2020 5:30 AM

இந்தியாவில் ரபேல் போர் விமானங்களை இயக்கும் முதல் பெண்மணி தேர்வு !

Posted Date : Sep 24 2020 5:30 AM

நாட்டிலேயே முதல் முறையாக அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை இயக்க பெண் விமானியான ஷிவாங்கி சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் இருந்து ரூ.59,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க கடந்த 2016-ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் 5 விமானங்கள் கடந்த ஜூலை மாதம் இந்தியா வந்தடைந்தது. இதனையடுத்து ரஃபேல் விமானங்கள் இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டது. இந்நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை இயக்க பெண் விமானியான ஷிவாங்கி சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் வாரணாசியை சேர்ந்தவர்.

2017ம் ஆண்டு இவர் இந்திய விமானப் படையில் இணைந்துள்ளார். அவருக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அம்பாலாவில் உள்ள 17 Squadron, 'Golden Arrows'-ல் இணையவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் கடந்த 2017 ஆண்டு முதல் MiG-21 Bisons விமானங்களை இயக்கி வருகிறார். ராஜஸ்தானில், விங் கமாண்டர் அபிநந்தனுடன் பணியாற்றியுள்ளார். விமானப் படையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை அவருக்கு சிறுவயது முதலே இருந்ததாக கூறியுள்ளார்.

வாரணாசியில் இருக்கும் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பள்ளி படிப்பை முடித்தார்.இதற்குப் பின்னர், தேசிய சாரணர் படையில் சேர்ந்து பணியாற்றினார். இதன் பின்னர் 2016ல் இந்திய விமானப் படை அகாடமியில் சேர்ந்தார். தற்போது ரபேல் போர் விமானத்தை இயக்க இருக்கும் முதல் பெண் என்ற பெருமைக்குரியவர் ஆகிறார்.பெண் விமானி ஷிவாங்கி சிங்குக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை