October 29, 2020 Thursday 09.38 PM
Newsletter Home

சற்றுமுன்

யுவன் முத்து
Posted Date : Sep 24 2020 6:05 AM

விஜயகாந்த் கொரோனாவிலிருந்து மீண்டாரா ? இரு வேறுவிதமான அறிக்கையால் குழப்பம் !

Posted Date : Sep 24 2020 6:05 AM

விஜயகாந்திற்கு கொரோனா என செய்திகள் வெளிவந்த நிலையில்,அதனை மியாட் மருத்துவமனையும் உறுதி செய்துள்ளது .

மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் , தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த செப்டம்பர்  22 ம் தேதி உறுதி செய்யப்பட்டது .தற்போது , அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் ,உடல்நிலை சீராக உள்ளது .விரைவில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .


 
இந்நிலையில் , தேமுதிக கட்சியின் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் , கொரோனா அறிகுறி தென்பட்டது உண்மை என்றும் , அது உடனடியாக சரி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .தற்போது , பூரண உடல்நலத்துடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது .

இந்த இரு அறிக்கையின் படி , தற்போது விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி என்பவை தெரிய வந்தாலும் ,கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டாரா ? என்கிற கேள்வி எழுந்துள்ளது 
தேமுதிக கட்சி தொண்டர்களும் ,விஜயகாந்த் ரசிகர்களும் இதனால் குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளனர் 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை