October 20, 2020 Tuesday 10.43 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Sep 28 2020 4:06 AM

வேளாண் மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் - கண்டுக்கொள்ளப்படாத விவசாயிகளின் போராட்டம்

Posted Date : Sep 28 2020 4:06 AM

வேளாண் மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்ட மசோதாக்கள் தொடர்பாக நாடு முழுவதும் விவசாயிகள் அரசியல் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன . காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட ஆகிய எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கூடாது என வலியுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து வேளாண் சட்டத்தை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது.

இந்நிலையில், வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்கள், விவசாயிகளுக்கு எதிரானது என திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில், வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி, திமுகவும், அதன் தோழமை கட்சிகளும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன. தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில், திமுகவுடன் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை