October 20, 2020 Tuesday 11.26 PM
Newsletter Home

சற்றுமுன்

ரூபன்
Posted Date : Sep 28 2020 7:23 AM

நீட்டுக்கு எதிராக மக்கள் பாதை பேரியக்கத்தின் உண்ணாவிரத போராட்டம் வெற்றியா ? தோல்வியா ?

Posted Date : Sep 28 2020 7:23 AM


நம் மக்கள் பாதை இயக்கம் நடத்திய மாபெரும் கையெழுத்து மற்றும் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் பற்றிய நினைவலைகளை பார்ப்போம்.

நீட்டுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் 


(14.09.2020) திங்கட்கிழமை காலை சரியாக 10 மணியளவில் தொடங்கிய இந்த போராட்டம் , மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் திரு. நாகல் சாமி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. பங்கேற்ற அனைவரும் நீட் தேர்வு குறித்த தங்களின் கண்டனங்களை, கையெழுத்து போராட்டத்தில் தங்களின் கையெழுத்து மூலம் பதிவு செய்தனர்.
இறந்த தமிழ் மாணவர்களின் இறப்புக்கும், நீட் தேர்வுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

என் குழந்தைக்கு நீட் வேண்டாம்!!!

இரவு போர்த்தும் நேரத்தில், இறந்த மாணவர்களின் படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வீர முழக்கங்கள் எழுப்பிய பின்னர் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்த நேரத்தில் தனது 10 மாத கைக்குழந்தையுடன் வந்த தாய் ஒருவர், "என் குழந்தைக்கு நீட் வேண்டாம்" என்று கூறி தங்களின் நீட் எதிர்ப்பை, தனது கையெழுத்து மூலமாக பதிவு செய்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

போராட்டகளத்தை கொண்டாட்டமாக்கிய பறை 

மறுநாள் செவ்வாய்கிழமை காலை, உண்ணாவிரதத்தில் ஈடுபடும் அனைவருக்கும் உடல் பரிசோதனை மக்கள் பாதை பொருளாளர் மருத்துவர் அவர்களால் சோதனை செய்யப்பட்டது. அன்று தொடங்கி, போராட்டம் முடிவுக்கு வரும்வரை, பொருளாளர் மருத்துவர் அவர்களால் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


நண்பகல் நேரத்தில், வயது முதிர்ந்த முதியவர் ஒருவர், தாமாக வந்து இறந்த மாணவர்களின் படங்களுக்கு, அஞ்சலி செலுத்தியது காண்போரை கண்கலங்க வைத்தது.
பொழுது சாயும் நேரம், பறை இசை முழங்க இறந்துபோன மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மூன்றாவது நாள் மெழுகுவர்த்தி ஏந்தி தீப அஞ்சலி !!

 


      மறுநாள் புதன்கிழமை மாலை, மாற்று ஊடக அமைப்பின் நிறுவனர் திரு.காளீஸ்வரன் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர் அவரது அமைப்பு சார்பில் பறை இசையானது முழங்கப்பட்டு,வெற்றி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மறுநாள் காலை, தமிழ் தேசிய பேரியக்க உறுப்பினர்கள் வந்து உண்ணாவிரத போராட்டத்திற்கு தங்களின் ஆதரவை வழங்கினார்.
காலையில் முழக்கங்களுடனும், மாலையில் மெழுகுவர்த்தி ஏந்தி தீப அஞ்சலி செலுத்துவது மூலமும், இரவு பகலாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது.
 நீட் அரக்கனால் உயிர் நீத்த எங்கள் தமிழ் மாணவர்களுக்கு சமர்ப்பணம்
அடுத்த இரு நாட்களாக, காவல்துறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதிலும் தீர்வானது கிடைக்கவில்லை. மேலிட அழுத்தங்கள் காரணமாக காவல்துறையும் தங்களின் கைது நடவடிக்கைகளை துரிதப்படுத்த நிறைய முயற்சிகளை எடுத்தபோதிலும் நிரந்தர தீர்வு இல்லாமல் போராட்டமானது கைவிடப்பட மாட்டாது என்ற ஒருமித்த குரலே அங்கு ஒலித்தது. 
போராட்டகாரர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கா அரசு 
ஆதரவு கரங்கள் அதிகமான போதிலும், அரசின் பாராமுகம், போராட்ட வெறியை மேலும் இயக்கத்தினருக்கு கூட்டியது. அரசின் இருமாப்பு எங்கள் உயிர்களில் இருந்தால், நீட் அரக்கனால் உயிர் நீத்த எங்கள் தமிழ் மாணவர்களுக்கு சமர்ப்பணம் என்ற இருமாப்பு, இயக்கத்தின் ரத்தங்களிடையே அதிகரித்தது.
போராடினால்தான் உனக்கான நீதி, சமூக நீதி கிடைக்குமானால் உயிரை விடுவதற்கு கூட தயார் என்று கூறிய நமது இயக்கத்தின் வேங்கைகள், மாநில அரசு வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற மேலான கோரிக்கையை முன்வைத்தனர். 
ஆனால் மாநில அரசோ, தங்கள் கட்சிக்குள் உள்ள பிரிவினை  பிரச்சனையில் காட்டும் ஆர்வத்தை, பட்டினி கிடந்து போராடும் நமது இயக்க உறுப்பினர்களின் மேல் காட்ட மறுக்கிறது.

காவல் துறையானது மேலும் மேலும் பேச்சுவார்த்தை செய்ய, சாகும்வரை உண்ணாவிரதம் என்ற ஒரு பதிலே அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

நிறைய அமைப்பினர்,இயக்கத்தினர் மற்றும் கட்சியை சார்ந்தவர்கள் தங்களின் பங்களிப்பையும் வழங்க, போராட்ட களமானது அனல்பறக்க தொடங்கியது. ஆனால் அரசு சார்பில் யாரும் பேச தயாராக இல்லை. 

காவல் துறையின் அராஜகப்போக்கு 


20.09.2020 ஞாயிறுக்கிழமை, காலை சரியாக 6 மணியளவில், காவல்துறை தங்களின் அராஜகத்தை உண்ணாநிலை போராட்ட களத்தில் அரங்கேற்றியது. உண்ணாநிலையின் ஏழாம் நாளை எட்டிய போராட்டக்காரர்களை ஈவு இரக்கமற்ற முறையில், தர தரவென இழுத்துச்சென்று, அரசு பேருந்து ஒன்றில் ஏற்றி கைது செய்தது. உண்ணாநிலை மேற்கொண்டவர்களின் உடல் நலனை கூட பொருட்படுத்தாமல், காவல்துறை பின்பற்றிய வழிமுறைகள், அரசின் நிலைப்பாட்டை உணர்த்தியது.
கைது செய்யும் போது காவல்துறை மேற்கொண்ட அடிதடியால், போராட்டக்களத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் காயமுற்றனர். கைதுசெய்த அனைவரையும் அரசு பேருந்தில் ஏற்றி, திருமண மண்டபம் ஒன்றில் அடைத்திருந்தனர். அங்கும் உண்ணாநிலை போராட்டமானது தொடர்ந்தது. அங்கும் செய்யப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைய, உண்ணாநிலையை தொடர்ந்த 6 பேரையும், காவல்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, உண்ணாநிலையை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்தனர்.
பின்னர் நீட் தேர்வினால் இறந்த தமிழக மாணவ மாணவியரின் பெற்றோரின் அன்பு கட்டளைக்கு பணிந்து, போராட்டத்தை நீட்டிக்க வேண்டாம் என்ற சமூக வலைதள பக்கங்களின் கருத்துகளுக்கு ஏற்ப போராட்டமானது முடிவுக்கு வந்தது.
பின்னர் உண்ணாநிலை போராட்ட போராளிகளின் முடிவுக்கு பின்னர் உண்ணாநிலை போராட்டமானது முடித்துக்கொள்ளப்பட்டதாக ஒருமனதாக அறிவிக்கப்பட்டது. 
7 நாட்களாக உண்ணாநிலையை அறவழியில் தொடர்ந்த போராளிகளின் போராட்டமானது அரசின் அராஜக கரங்களால் ஒடுக்கப்பட முயற்சிகள் அரங்கேறினாலும்,கொள்கை பிடிப்பை தங்கள் உயிரின் மேல் வைத்திருந்த போராளிகளின் மனவலிமை தமிழக மக்கள் அனைவராலும் அறியப்பட்டது. ஊடக வெளிச்சம் என்பது குறைவாக இருந்தும், சமூக வலைத்தளங்களில் மக்களின் ஆதரவு மேலோங்கியே இருந்தது. 

நீட் தேர்வுக்கு எதிராக, மக்கள் பாதை இயக்கமானது தொடக்கப்புள்ளி வைத்து புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தபோதும், இனி வரப்போகும் மக்கள் புரட்சிக்கு இணையாக ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு இணையான மக்கள் எழுச்சி மற்றும் இளைஞர் எழுச்சி இருக்கும் என்பதில் அந்த ஐயமும் இல்லை.
 

Comments Here

  • ?.????? Sep 28,2020 | 04:02 PM

    மக்கள் பாதை என்ற பேரியக்கம் தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் பேசப்பட்டது. காவல்துறையின் அத்துமீறிய செயலும் பெண்கள் மேல் அராஜக முறையில் தரதரவென்று இழுத்துக் கொண்டு வரப்பட்டதும் சாத்தான்குளம் ச

  • V A SURYA Sep 28,2020 | 08:26 AM

    Ipl vandha piragu yaru sir adha kandukiranga