October 29, 2020 Thursday 10.59 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Sep 29 2020 9:48 AM

அத்வானி மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கு : நாளை தீர்ப்பு !

Posted Date : Sep 29 2020 9:48 AM

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் தீர்ப்பின்போது நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி இடிக்கப்பட்டது. தொடக்கத்தில் மாநில போலீஸ் விசாரித்த இவ்வழக்கு, பின்னர் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்-மந்திரி கல்யாண்சிங் உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களுக்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.


17 பேர் இறந்து விட்டதால், 32 பேர் மீது வழக்கு விசாரணை நடந்தது. இதில் சிபிஐ தரப்பில் 351 பேர் சாட்சியம் அளித்திருந்தனர். மேலும் சுமார் 600 ஆவணங்களும் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. முன்னதாக 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விசாரணை முடிவடைவதற்கான காலம், கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம், மேலும் மூன்று மாத கால அவகாசம் அளித்து, ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் தீர்ப்பை வழங்க வேண்டும் என்று கூறியது.

 

இனி எந்த கால தாமதமும் இருக்கக்கூடாது எனவும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகிறது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை