October 29, 2020 Thursday 09.52 PM
Newsletter Home

சற்றுமுன்

யுவன் முத்து
Posted Date : Sep 29 2020 1:28 PM

உ.பி : 19 வயது பெண் நாக்கு துண்டிக்கப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !

Posted Date : Sep 29 2020 1:28 PM

செப்டம்பர் 14 ஆம் தேதி உத்திரபிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் நான்கு உயர் சாதி ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட  19 வயது தலித் பெண் புதுடெல்லியில் உள்ள மருத்துவமனையில் பலியானார்.


 ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட பெண்  மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நாக்கு துண்டிக்கப்பட்டு முதுகெலும்பு பலத்த காயம் அடைந்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தலைநகரில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்குச் மாற்றப்பட்டார் .தன் தாயுடன் வயலுக்கு வேலை சென்றிருந்த நிலையில் அவரின் துப்பட்டாவைக் கொண்டு கழுத்தை நெருக்கி இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். 


இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அக்கிராமத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் எஸ்சி / எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ,மற்றும்  கும்பல் மற்றும் கொலை முயற்சியின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 23 அன்று பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் சந்தீப், அவரது மாமா ரவி (35) மற்றும் அவர்களது நண்பர் லவ் குஷ் ஆகிய மூன்று பேர் இந்தக் குற்றத்தைச் செய்ததாக கைது செய்யப்பட்டனர் .


பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ .10 லட்சம் உதவி வழங்கப்படும் என்று ஹத்ராஸ் மாவட்ட நீதவான் பிரவீன் குமார் தெரிவித்தார்.
நிர்பயா தொடங்கி இன்று வரை இதைப்போல் பல பாலியல் குற்றங்கள் நடப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் , சமூக நல ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமில்லாமல் , 4 பேருக்கு கடுமையான தண்டனை வழங்க குரல் எழுப்பி வருகின்றனர் .

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை