October 29, 2020 Thursday 11.14 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Sep 30 2020 8:41 AM

பாபர் மசூதி : 28 ஆண்டுகளிக்குப் பின் தீர்ப்பு ! அத்வானி இடிக்கவில்லை - அப்போ இடித்தது யார் ?

Posted Date : Sep 30 2020 8:41 AM

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் பாஜக மூத்த தலைவர்கள் எல் கே அத்வானி முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 49 பேர் குற்றம் மீது குற்றம் சாட்டி சிபிஐ போலீஸார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அதில் 17 பேர் இறந்து விட்டதால், தற்போது 32 பேர் மீது உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வழங்கப்பபட்டது.

 

 

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 600க்கும் மேற்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 2000 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை லக்னோ சிபிஐ நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் வாசித்தார் அதில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை. வீடியோ, ஆடியோ ஆதாரங்களின் உண்மைத்தன்மையை சிபிஐ நிரூபிக்கவில்லை.

 

 

"எல்.கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றோர் வன்முறையாளர்களை தடுக்க முயன்றனர் என்றும் சமூகவிரோதிகள் தான் பாபர் மசூதியின் மீது ஏறி நின்று இடித்தனர்" என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

மேலும் பாபர் மசூதி முன்கூட்டியே திட்டமிடப்பட்டு இடிக்கப்படவில்லை என்றும் பாபர் மசூதி முன்கூட்டியே திட்டமிட்டு இடிக்கப்பட்டது என்பதற்கு தகுந்த ஆதாரத்தை சிபிஐ நிரூபிக்கவில்லை. இதனால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எல்கே அத்வானி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 28 வருடங்களுக்கு பின்னர் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை