October 29, 2020 Thursday 09.47 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Sep 30 2020 10:45 AM

தமிழகம் : நாளை முதல் இந்த மாவட்டங்களை தவிர “ ஒரே நாடு ஒரே ரேஷன் “

Posted Date : Sep 30 2020 10:45 AM

தமிழகத்தில் 'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்' நாளை (01/10/2020) முதல் அமலுக்கு வருகிறது.

இந்த திட்டத்தால் பிற மாநில ரேஷன் கார்டுதாரர்களும் தமிழக ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்களை வாங்க முடியும். ரேஷன் கார்டுதாரர்கள் கைரேகையைப் பதிவு செய்து, அரிசி, கோதுமை வாங்கலாம்; அதற்காக மத்திய அரசு நிர்ணயித்துள்ள தொகை வசூலிக்கப்படும். இடம் பெயரும் தொழிலாளர்களின் பசியைப் போக்க, ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் 'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்' நாளை (01/10/2020) அமல்படுத்தப்படுவது தொடர்பாக தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில், 'சென்னை, திருச்சி, அரியலூர், நாகை, கோவை ஆகிய மாவட்டங்களில் நாளை (01/10/2020) 'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்' அமலுக்கு வருகிறது. தூத்துக்குடி, தஞ்சை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்' அக்டோபர் 16- ஆம் தேதி அமலாகிறது' என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி , பேசுகையில் ..

தமிழகத்தில் எந்த இடத்தில் வசித்தாலும், அங்கு இருக்கக்கூடிய ரேசன் கடைகளில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறிய அவர், ரேசன் பொருட்கள் கிடைக்கவில்லை என்ற நிலை இருக்காது எனவும் தெரிவித்தார்.

 ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்திற்காக கூடுதல் விதிமுறைகள் விதிக்கப்பட்டதோடு, கடை ஒன்றிற்கு 5% பொருட்கள் கூடுதாக விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், முதல்கட்டமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை