October 29, 2020 Thursday 10.53 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 1 2020 5:11 AM

அக்.2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுபானக் கடைகள் விடுமுறை !

Posted Date : Oct 1 2020 5:11 AM

: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாளை மதுகடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாக கலெக்டர்கள் காஞ்சிபுரம் பொன்னையா, செங்கல்பட்டு ஜான்லூயிஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

காந்தி ஜெயந்தி முன்னிட்டு மதுக்கடைகள் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாளை அக். 2ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 'டாஸ்மாக்' மதுக்கடைகள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் நாளை முழுவதும் திறக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீறி மதுக்கடைகள் திறக்கப்பட்டால் கடை ஊழியர்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுக்கடைகளுடன் இணைந்த பார்கள்; ரெஸ்டாரன்ட்களுடன் இணைந்த பார்கள் மற்றும் உரிமம் பெற்ற 'ஏசி' பார்கள், மனமகிழ் மன்றங்களுடன் இணைந்து பார்கள் அனைத்தும் ஏற்கனவே மூடப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை