October 29, 2020 Thursday 10.51 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 15 2020 6:01 AM

தப்பு பண்ணிட்டோம் ! பரவாயில்லை ” அனுபவமே பாடம் “ - ரஜினிகாந்த் விளக்கம் !

Posted Date : Oct 15 2020 6:01 AM

சொத்து வரி தொடர்பாக நடிகர் ரஜினி நீதிமன்றம் அனுகியதை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டு வந்த நிலையில் விளக்கம் தந்துள்ளார் ரஜினி .அனுபவமே பாடம் - என நீதிமன்ற தீர்ப்பிற்கு தன் தரப்பு பதிலை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகர் ரஜினி .

ரஜினிகாந்த் அவர்களின் திருமண மண்டபம் ஆனது கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக திறக்கப்படவில்லை. ஆனால் பொதுமுடக்கம் காலத்தில் பயன்படுத்த முடியாமல் அடைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்திற்கு சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த சொத்து வரியை ரத்து செய்ய உத்தரவிடுமாறு ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

 மனுவில் , ரஜினிகாந்தின் திருமண மண்டபத்திற்கு சென்னை மாநகராட்சி, ஏப்ரல் - செப்டம்பர் மாதத்திற்கான சொத்து வாரியாக 6.50 லட்சத்தை கட்ட வேண்டும் என கடந்த செப்.10 தேதி இன்வாய்ஸ் அனுப்பியுள்ளது. எனவே காலியாக இருந்த திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது .

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், நோட்டீஸ் அனுப்பி 10 நாட்களே ஆன நிலையில் உடனே வழக்கு தொடரப்பட்டது முறையற்றது. அத்துடன், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாகவும் சுட்டிக்காட்டி எச்சரிக்கப்பட்டது. மேலும் இன்று இரவு ( அக்.15 ) க்குள் வரியை கட்டவில்லையென்றால் 2% அபராதத் தொகை கூடுதலாக வசூலிக்கப்படும் என அறிவித்தார் .

 இதனையொட்டி ரஜினி தரப்பில் வழக்கு திரும்ப பெற அனுமதி கோரப்பட்டது. இன்று இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ரஜினி "ராகவேந்திரா மண்டப சொத்து வரி...நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். #அனுபவமே_பாடம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த டிவீட்க்கு ஆதரவாகவும், கேலி செய்யும் வகையில் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை