October 29, 2020 Thursday 10.19 PM
Newsletter Home

சற்றுமுன்

யுவன்முத்து
Posted Date : Oct 15 2020 8:03 AM

முத்தையா முரளிதரன் : கிரிக்கெட் வாழ்வும் - அரசியல் நிலைப்பாடும் ! ஏன் 800 படத்திற்கு எதிர்ப்பு கிளம்புகிறது ?

Posted Date : Oct 15 2020 8:03 AM

அவமானங்கள் , சோதனைகள்,  தடைகள் என இருந்தும் காலம் கடந்து நிற்கும் சாதனையை கிரிக்கெட்டில் செய்துள்ளார் முத்தையா முரளிதரன் .இலங்கையில் வாழும் தமிழராக இருந்தபோதும் ஈழத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார் என்கிற குற்றச்சாட்டு பரவலாக பேசப்படுகிறது . அதன் விளைவால் தான் தற்போது விஜய்சேதுபதி நடிக்கும் 800 என்கிற படத்திற்கு பல எதிர்ப்புகள் தமிழகத்தில் எழுந்துள்ளன .

                    17ஏப்ரல் 1972 ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள கண்டியில் சின்னசாமி முத்தையா -லட்சுமி அவர்களுக்கு மகனாக பிறந்தார். முரளிதரனின் தாத்தா திருச்சியை பூர்விகமாக கொண்டவர் .பிறப்பால் அவர் ஒரு இந்திய தமிழர் என்பதற்கு எல்லாத் தகுதியும் உண்டு .அவரின் தந்தை இலங்கையில் பிஸ்கெட் தயாரிக்கும் நிறுவனத்தில்
 வேலை செய்து வந்தார் .

கிரிக்கெட் வாழ்வு :

                                    தனது ஆரம்பகாலக் கல்வியை இலங்கையில் புனித அந்தோணியார் கல்லூரியில் பயின்றார் .அங்கு தான் கிரிக்கெட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டு பள்ளி அணிக்காக விளையாடினார் .முதலில் வேகப்பந்து வீச்சாளராகத் தான் செயல்பட்டார் .பயிற்சியாளரின் அறிவுறுத்தலின் பேரில் சுழற்பந்து வீச்சாளராக மாறினார் .இந்திய அணியில் இடம்பெற முயற்சித்தார். ஆனால் அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை ,இலங்கை அணியின் சார்பில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் .

                                      1995 ஆம் ஆண்டு  முரளிதரன் பந்துவீசும் முறை சர்சைக்குள்ளானது .அவர் பந்தை எறிவதாக கூறி போட்டிகளில் பந்து வீச தடை விதிக்கப்பட்டது .பல்வேறு சோதனைகளுக்குப் பின் மீண்டும் பந்துவீச அனுமதி வழங்கப்பட்டது .பிறவிலேயை தன் கை வளைந்திருக்கிறது.அது கடவுள் தந்த பரிசு.நீங்கள் எத்தனை முறை சோதனை செய்தாலும் நான் இப்படி தான் பந்து வீசுவேன் என கூறினார் 

                                 2010 ஆம் ஆண்டு இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் 800 விக்கெட்டுடன் டெஸ்ட் போட்டிகளில் ஒய்வுபெற்றார்.விஸ்டன் நாட்குறிப்பில் உலகின் தலைசிறந்த வீரராக முரளிதரனின் பெயர் பதிவு செய்யப்பட்டது .சர்வதேச கிரிக்கெட்டில் தான் பந்துவீச பயந்த ஒரே பேட்ஸ்மேன் சேவாக் தான் என வெளிப்படையாக கூறினார் .கிரிக்கெட் உலகில் 18 ஆண்டுகளாக விளையாடிய அவர் 133 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்கள் மற்றும் 350 ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார் .டெஸ்ட் போட்டிகளில் 22 முறை 10 விக்கெட்டுகள் 67 முறை 5 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்

அரசியல் நிலைப்பாடு  :

                            முரளிதரனை அரசியலுக்குள் இழுக்க மஹிந்தா ராஜபக்சே பெருமளவு முயன்றார் .ஆனால் அரசியலுக்கும் எனக்கும் வெகுதூரம் என விலகினார் .விடுதலைப்புலிகள் அமைப்பினால் தமிழர்கள் பல்வேறு இழப்புகளை சந்திக்க நேரிட்டதாக கருத்து தெரிவித்தார் .இலங்கையில் 80 % சிங்களர்கள் இருப்படதால் நாடு அவர்களுக்கே சொந்தம் எனவும் கருத்து தெரிவித்தார் .

இது தமிழ் ஈழத்திற்காக போராடியவர்கள் மத்தியில் கடும் கோபத்தை தூண்டியது .இந்த கருத்திற்கு மஹிந்தா ராஜபக்சே ஆதரவு தந்தாகவும் செய்திகள் வெளியாகின.இனப்படுகொலையாளியை முரளிதரன் ஆதரிப்பதாக கண்டனங்கள் எழுந்தன .

               இந்நிலையில் தான் தமிழகத்தில்  விஜய்சேதுபதி முரளிதரனின் வாழ்வை மையமாக கொண்டு நடிக்கும் 
படத்திற்கு (800) எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன .கிரிக்கெட் வீரராக சச்சினின் சாதனையை நெருங்குவது எவ்வளவு கடினமோ அதுப் போல் தான் முரளிதரனின் சாதனையை நெருங்குவதும்  !

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை