October 29, 2020 Thursday 09.19 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 15 2020 10:20 AM

மோடி , அமித்ஷா சொத்து விவரம் வெளியீடு ! - வீட்டுக்கடன் வைத்திருக்கும் நிர்மலா சீதாராமன்

Posted Date : Oct 15 2020 10:20 AM

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தனது அமைச்சரவை சகாக்களுடன் சேர்ந்து தனது சொத்துக்கள் குறித்த தகவலை தானாக முன்வந்து வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ஜூன் 30, 2020 நிலவரப்படி கிட்டத்தட்ட 2.85 கோடியாக உள்ளது. இது 2019’ஆம் ஆண்டில் அவர் அறிவித்த 2.49 கோடி மதிப்புள்ள சொத்துக்களிலிருந்து அதிகரித்துள்ளது. சொத்துக்களின் அதிகரிப்பு பெரும்பாலும் அவரது வங்கி இருப்பு அதிகரிப்பு மற்றும் அவரது வங்கி நிலையான வைப்புத் தொகைக்கு கிடைத்த வட்டியை மறு முதலீடு செய்ததன் மூலம் கிடைத்த தொகையாகும்.

கடனே இல்லாத மோடி :

70 வயதான பிரதமருக்கு பூஜ்ஜிய கடன் உள்ளது. ஜூன் மாத இறுதியில் பிரதமர் மோடியிடம், 31,450 ரூபாய் ரொக்கம் இருந்தது. பிரதமரின் சேமிப்புக் கணக்கு இருப்பு ஜூன் 30 அன்று ₹ 3.38 லட்சமாக இருந்தது. இது மார்ச் 31, 2019 அன்று, 4,143 ரூபாயாக இருந்தது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் காந்திநகர் கிளையில் அவரது நிலையான வைப்புத் தொகை 2020 ஜூன் 30 நிலவரப்படி 1,60,28,039 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த வருடம் 1,27,81,574 ரூபாயாக இருந்தது.

தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடு :

பிரதமரிடம் நான்கு தங்க மோதிரங்கள் உள்ளன. அவை சுமார் 45 கிராம் எடையுள்ள 1,51,875 ரூபாய் மதிப்பிலானது. பிரதமர் பங்குகளில் முதலீடு செய்யவில்லை. பிரதமருக்கு காந்திநகரில் 1.1 கோடி மதிப்புள்ள ஒரு வீடு உள்ளது. அவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து இதன் ஒரு பகுதி உரிமையாளராக உள்ளார். இந்த அசையா சொத்து பிரதமர் மற்றும் இதர மூன்று நபர்களுக்கும் கூட்டாக உரிமையுடையது.

பிரதமர் மோடிக்கு கார்கள் இல்லை :

பிரதமரின் சொத்து மதிப்பு அதிகரித்து வந்தாலும் அவருக்கு சொந்தமாக கார் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித்ஷாவின் சொத்து மதிப்பு :

கடந்த ஆண்டு ரூ.32.3 கோடியாக இருந்த அமித்ஷாவின் சொத்து மதிப்பு இந்தாண்டு ரூ.28.63 கோடியாக குறைந்திருக்கிறது. பங்குச் சந்தையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாக அமித்ஷா சொத்து மதிப்பு சரிந்துள்ளது. கையிருப்பாக ரூ.15,814 வைத்துள்ளார். அவர் வங்கி கணக்கில் ரூ.1.04 கோடி உள்ளது. டெபாசிட் கணக்கில் ரூ.2.79 லட்சம் உள்ளது. ரூ.13.47 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ், பென்சன் பாலிசிகளும், ரூ.44.47 லட்சம் மதிப்பிலான நகைகளும் உள்ளதாக கூறியுள்ளார். பரம்பரை சொத்து உட்பட ரூ.13.56 கோடிக்கு 10 அசையா சொத்துக்கள் அமித்ஷா பெயரில் உள்ளன .

நிர்மலா சீதாராமனின் சொத்து விவரம் :

சீட்டாக் ஸ்கூட்டர் வைத்திருக்கும் நிதி அமைச்சர்நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது கணவர் மற்றும் தன்னுடைய பெயரில் கூட்டாக ரூ.99.36 லட்சம் மதிப்பிலான குடியிருப்பு உள்ளது என கூறியுள்ளார். மேலும் ரூ.16.02 லட்சத்துக்கு நிலம் உள்ளது. 19 ஆண்டு வீட்டுக் கடன் மற்றும் அடமானக் கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சொந்தமாக நான்கு சக்கர வாகனங்கள் இல்லை, ஆந்திர பதிவு எண் கொண்ட பஜாஜ் சீட்டாக் ஸ்கூட்டர் வைத்திருப்பதாக கூறியுள்ளார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை