October 29, 2020 Thursday 10.57 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 17 2020 4:41 AM

நீட் தேர்வு முடிவில் குளறுபடி ? உண்மை நிலவரம் என்ன ?

Posted Date : Oct 17 2020 4:41 AM

நேற்று வெளியான நீட் தேர்வு முடிகளில் தமிழகத்தின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து இருந்தாலும் ஆந்திரா . திரிபுரா . உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் தேர்ச்சி சதவீதத்தில் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையை அச்சம் எழுந்துள்ளது.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு 1.21 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.  நீட் தேர்வை 99 ஆயிரத்து 610 பேர் எழுதினார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு மாநில அளவில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை 1 லட்சத்து 23 ஆயிரத்து 78 பேர் எழுதினார்கள். இதில் 59 ஆயிரத்து 785 பேர் தகுதி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 48.57 சதவீதமாக இருந்தது. அப்போது மாநில அளவில் 23-வது இடம் தமிழ்நாட்டுக்கு கிடைத்தது.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வை 99 ஆயிரத்து 610 பேர் எழுதினார்கள். கடந்த ஆண்டை விட குறைவானவர்கள் தேர்வை எழுதியிருந்தாலும் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து உள்ளது. இந்த ஆண்டு 57.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதன் மூலம் கடந்த ஆண்டு 23-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, தேர்ச்சி பட்டியலில் 15-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. கடந்த ஆண்டு கடைசி இடம் பிடித்த நாகலாந்து, இந்த ஆண்டும் கடைசி இடத்தை தக்க வைத்துள்ளது.

 

 

தேசிய தேர்வு முகமை வெளியிட்ட நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவில் குளறுபடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திரிபுராவில் 3,536 பேர் தேர்வு எழுதிய நிலையில் 88,889 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கானாவில் 50 ஆயிரத்து 392 பேரில் 1738 பேர் பாஸ் ஆன நிலையில் தேர்ச்சி விகிதம் 49.15% என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் உத்தரகாண்ட் மாநிலத்தில் 12,047 பேர் தேர்வு எழுதிய நிலையில் தேர்ச்சி பெற்றது 37, 301என அறிவிப்பு வெளியாகியுள்ளது. உ.பி.யில் 1.56 லட்சம் பேரில் 7 ஆயிரத்து 323 பேர் பாஸ் ஆன நிலையில் தேர்ச்சி விகிதம் 60.79% என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் எண்ணிக்கை மாநில தேர்ச்சி விகிதத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தனிப்பட்ட மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டிருக்குமோ என பெற்றோர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை