October 29, 2020 Thursday 09.27 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 17 2020 10:16 AM

சென்னைக்கு உதவிய மும்பை : வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளுமா சிஎஸ்கே !

Posted Date : Oct 17 2020 10:16 AM

ஐபிஎல் கிரிக்கெட்டின் 32-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நேற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 148 ரன்களே எடுத்தது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் பேட் கம்மின்ஸ் 53 ரன்களும், மோர்கன் 39 ரன்களும் அடித்தனர். அதன் பின்னர் 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா, குயின்டான் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கம் முதலே டி காக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 10.3 ஓவரில் 94 ரன்கள் எடுத்திருக்கும்போது பிரிந்தது. ரோகித் சர்மா 36 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 


இறுதியில் மும்பை இந்தியன்ஸ் 16.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டி காக் 44 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 78 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவினார் .

மும்பை அணியின் இந்த வெற்றி ஒரு வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரொம்ப முக்கியமானதும் கூட. காரணம் , சென்னை அணி அரை இறுதி போட்டிக்குள் நுழைவதற்கு இனி வரும் எல்லாப் போட்டிகளிலும் வென்றாக வேண்டும் .அதே சமயத்தில் மற்ற அணிகளின் வெற்றி , தோல்வியும் சென்னை அணியின் அரை இறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் .

இதனால் , நேற்று மும்பை அணியின் வெற்றியை அதன் ரசிகர்களும் மட்டுமின்றி சென்னை ரசிகர்களும் கொண்டாடினார் .

இன்று (அக்.17 ) பலம் வாய்ந்த டெல்லி அணிக்கு எதிராக சென்னை அணி மோதிகிறது ,இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இந்த போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது . கொல்கத்தா அணியை வீழ்த்திய மும்பையின் வெற்றியின் களிப்பில் இருந்த ரசிகர்களுக்கு அந்த மகிழ்ச்சி நீடிக்குமா என்பது இன்றைய போட்டியின் முடிவு பொருத்தே அமையும் !

 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை