November 27, 2020 Friday 07.35 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 18 2020 4:34 AM

பிராவோவிற்கு இப்படி ஆகும்னு தெரியல : எங்களுக்கும் வேற வழியில்லை - தோல்வி குறித்து பிளமிங்

Posted Date : Oct 18 2020 4:34 AM

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் பிராவோ பந்து வீசமுடியாததற்கான காரணத்தையும், அவருக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவு குறித்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் விளக்கியுள்ளார்.

நேற்று சென்னை - டெல்லி அணிக்களுக்கு எதிராக நடைப்பெற்ற போட்டியில் கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 17ரன்கள் தேவை. வழக்கமாக டெத் ஓவரை பிராவோதான் வீசுவார். ஆனால், திடீரென ஜடேஜா வீசியது வியப்பாக இருந்தது. அனுபவமான ஜடேஜாவின் ஓவரில் அக்ஸர் படேல், 3 சிக்ஸர்களை விளாசி வெற்றியுடன் ஆட்டத்தை முடித்தார்.

பிராவோவுக்கு இன்னும் ஒருஓவர் மிச்சம் இருந்த நிலையில் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுத்து சமூக ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:

துரதிருஷ்டமாக பிராவோவுக்கு வலது தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பால் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஓய்வறைக்குச் சென்றதால்தான் கடைசி ஓவரில் அவரால் பந்துவீசமுடியவில்லை.பிராவோ இயல்பாகவே டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட், பல போட்டிகளில் கடைசி ஓவரில் பந்துவீசி அவர் சவால்களை வென்றுள்ளார்.

ஜடேஜாவை கடைசி ஓவரை வீச வைக்க வேண்டும் என்ற சிந்தனையில்லை. ஆனால், பிராவோவுக்கு காயம் ஏற்பட்டு அவர் பந்துவீச முடியாத காரணத்தால்தான் வேறு வழிதெரியாமல் ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மற்றபடி எங்களின் ஆட்டம், செயல்பாடு சிறப்பாகவே இருந்தது.

பிராவோவுக்கு ஏற்பட்ட காயத்தால்தான் அவரால் பீல்டிங் செய்யவும் முடியவில்லை, கடைசி ஓவரையும் வீச முடியவில்லை. இது பிராவோவுக்கே சற்று வேதனையாகத்தான் இருந்தது. தன்னால் கடைசி ஓவரை பந்துவீசமுடியவில்லை என்று வருத்தப்பட்டார்.

அணிக்காக பல நேரங்களில் ஏராளமாக பிராவோ செய்துள்ளார். பிராவோவுக்கு ஏற்பட்ட காயம் சில நாட்களில் சரியாகலாம் அல்லது 2 வாரங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டியது வரலாம். எதுவாக இருந்தாலும் நாளை காலை(ஞாயிற்றுக்கிழமை) தெரியும்' எனத் தெரிவித்தார்.

6 போட்டிகளில் இதுவரை பிராவோ 19 யார்கர்களை வீசியுள்ளார். பும்ரா 19 யார்கர்களையும், நடராஜன் 40 யார்கர்களையும் வீசியுள்ளனர்.

பிராவோவுக்கு ஏற்பட்டுள்ள காயம் சிஎஸ்கே அணிக்கு அடுத்த பெரும் பின்னடைவாகும். இதனால் இம்ரான் தாஹிர், மிட்ஷெல் சான்ட்னர் இருவரில் ஒருவரை அடுத்தப்போட்டியில் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே இருக்கிறது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை