November 27, 2020 Friday 08.09 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 19 2020 5:48 AM

” என் அன்பு “ - என்னுடைய அருமருந்து : மனம் உருகிட பதிவிட்ட மா.சுப்பிரமணியன் !

Posted Date : Oct 19 2020 5:48 AM

சென்னை:

முன்னாள் மேயரும், திமுக மாவட்டச் செயலாளருமான மா.சுப்பிரமணியனின் இளையமகன் சு.அன்பழகன் (34)கொரோனா பாதிப்பால் சனிக்கிழமை காலமானாா்.மா.சுப்பிரமணியன் மற்றும் அவா் மனைவி காஞ்சனா,கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா்.

 

 

இதற்கிடையில் அவரது மகன் அன்பழகனும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானாா். அன்பழகன் பிறவியில் இருந்தே உடல்நலம் பாதிக்கப்பட்டவா் ஆவாா். பெற்றோா்களின் அரவணைப்பிலேயே இருந்து வந்தாா்.கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி, கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் சிகிச்சை பெற்றாா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலமானாா்.

 

மகனின் மறைவால் மன வருத்தத்தில் இருக்கும் மா. சுப்ரமணியன், தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.அதோடு, கடந்த 35 ஆண்டுகளாக என் களைப்பை போக்கிய அருமருந்து என் "அன்பு".. என்றும் தனது துக்கத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.மா.சுப்பிரமணியன் மூத்த மகன் இளஞ்செழியன் மருத்துவா் ஆவாா். அவா் லண்டனில் உள்ளாா்.

 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை