November 27, 2020 Friday 08.27 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 19 2020 6:09 AM

திடீர் பரபரப்பு: வீரப்பனின் மனைவி, மகள் மீது போலீசார் வழக்கு பதிவு! நேற்று நடந்தது என்ன?!

Posted Date : Oct 19 2020 6:09 AM

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களும் சிம்மசொப்பனமாக விளங்கிய வீரப்பன் எனும் சந்தனக்கடத்தல் வீரப்பன், கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி அதிரடிப்படையினர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே தமிழக அதிரடிப்படையினரால் வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த 2004ம் ஆண்டு பஅக்டோபர் மாதம் 18ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர். வீரப்பன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பினும், அவர் ஒரு நல்ல மனிதர் என்றே தமிழகத்தில் பலராலும் கூறப்படுகிறது.

காவிரி நீரை தர வில்லை என்று அவர் தமிழர்களுக்காக, விவசாயிகளுக்காக செய்த விஷயம் இந்தியா முழுவதும் பரபரப்பை உண்டாக்கியது. அதிலிருந்தே வீரப்பன் மீது தமிழர்களுக்கு ஒரு மதிப்பும், மரியாதையும் உண்டாயிற்று என்று தான் சொல்ல வேண்டும்.

சுட்டுக்கொல்லப்பட்ட வீரப்பனின் உடல், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மூலக்காடு பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மற்றும் அவர் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம்.


 
அதேபோல் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பலரும் அவருக்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கொரோனா காரணமாக வீரப்பன் நல்லடக்கம் செய்யப்பட்ட பகுதியில் அஞ்சலி செலுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனை மீறி நேற்று ஏராளமானோர் அஞ்சலி செலுத்த சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், கொரோனா பரவலுக்கு காரணமாகவும் இருந்ததால் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, வீரப்பனின் இளைய மகள் பிரபாவதி, பாஜக மாநில இளைஞரணி நிர்வாகியான வித்யாராணி உள்ளிட்ட 100 பேர்கள் மீது மூலகாடு கிராம நிர்வாக அலுவலர், கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர், 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீரப்பனின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை