November 27, 2020 Friday 07.51 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 20 2020 5:26 AM

கையும் வரல : காலும் வரல : எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் !

Posted Date : Oct 20 2020 5:26 AM

மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த சீசனில் சரியாக சோபிக்க முடியாமல் திணறி, 10 போட்டிகளில் 7 தோல்விகளைச் சந்தித்து பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ளது. நடந்து முடிந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ஒரு பேட்ஸ்மேன் கூட அதிரடி காட்டாதது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 37-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது. ராஜஸ்தானுக்கு இது 4-ஆவது வெற்றி.

முதலில் ஆடிய சென்னை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து வென்றது. 70 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் ராஜஸ்தானை வெற்றிக்கு வழிநடத்திய ஜோஸ் பட்லர் ஆட்டநாயகன் ஆனார்.

இந்த வெற்றி ராஜஸ்தானுக்கு பிளே-ஆஃப் நம்பிக்கையை அளித்துள்ள நிலையில், தோல்வியடைந்த சென்னை போட்டியிலிருந்து வெளியேறும் விளிம்பு நிலைக்கு சென்றுள்ளது.இந்தத் தோல்வியால் சிஎஸ்கே அணி, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்துக்கு இறங்கியுள்ளது.

அணியில் ஜெகதீசன் போன்ற இளம் வீரர்கள் இருந்தும், தொடர்ந்து சொதப்பி வரும் வீரர்களுக்கு ஏன் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது எனக் கேள்விகள் எழுந்த நிலையில், போட்டி முடிந்த பிறகு தோனி இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

“இளைஞர்களுக்கு நாங்கள் அதிக வாய்ப்பு கொடுக்கவில்லை என்னும் விமர்சனம் நியாயமானதுதான். நாங்கள் இளைஞர்களிடம் பிரகாசமான திறமை இருப்பதாகப் பார்க்கவில்லை என்பது காரணமாக இருக்கலாம். இனி அவர்களைக் களமிறக்கி நெருக்கடி இல்லாமல் ஆடவைக்கலாம்” எனத் தெரிவித்தார் .

இந்நிலையில் இளம் வீரர்கள் குறித்த தோனியின் கருத்து அபத்தமானது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

தோனி கூறுவதை என்னால் சுத்தமாக ஏற்றுக்கொள்ள முடியாது. இப்போதும் கூட தோனி நடைமுறைகள் குறித்து பேசிக் கொண்டு இருக்கிறார். ஆனால் அணியை தேர்வு செய்யும் நடைமுறையே தவறு என்றுதான் நாம் கூற வேண்டும்

இளம் வீரர்களிடம் 'ஸ்பார்க்' இல்லை என்று தோனி சொல்கிறார். ஜெகதீசன் போன்றோரிடம் இல்லாத ஸ்பார்க் கேதர் ஜாதவ், பியூஷ் சாவ்லாவிடம் இருக்கிறதா என்ன? தோனியின் கருத்து அபத்தமானது மட்டுமல்ல ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று. நடைமுறை நடைமுறை என கூறிக்கொண்டே இறுதியாக ஐபிஎல் தொடரின் இறுதிக்கு சிஎஸ்கே வந்துவிட்டது என தனது ஆதங்கத்தை தொலைக்காட்சியின் வழியாக வெளிப்படுத்தினார் .

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை