November 27, 2020 Friday 07.12 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 20 2020 5:55 AM

தனி விமானத்தில் மாலத்தீவு சென்ற ஒபிஸ் மகன் : விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு !

Posted Date : Oct 20 2020 5:55 AM

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் தனி விமானத்தில் வெளிநாடு பயணம் சென்றது சர்ச்சைக்குள்ளாகியதை தொடர்ந்து, மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது

 அதிமுக வில் நீண்ட நாளாக நிலவி வந்த யார் முதல்வர் வேட்பாளர் ? என்பதற்கு அக்டோபர் 7 அன்று முடிவு செய்யப்பட்டது .அதுவரை  ஓ.பன்னீர் செல்வத்துக்கு உதவியாக அவரது மகனும் , எம்பியுமான ரவீந்திரநாத்குமார் பணியாற்றினார் .

முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலே ரவீந்திரநாத்குமார் தனி விமானத்தில் மாலத்தீவு சென்றார். பின்னர் அங்கிருந்து மொரீஷியஸ் சென்றார். அவருடன் 4 நண்பர்களும் உடன் சென்றனர்.தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் மொத்தமாக முடங்கியுள்ளதால் மக்கள் வாங்கிய கடனை கட்ட முடியாமலும், அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமலும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த ஒரு எம்பி, தனி விமானத்தில் நண்பர்களுடன் உல்லாச சுற்றுலா சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ரவீந்திரநாத்குமார் எம்பி மத்திய அரசின் அனுமதியில்லாமல் தனி விமானத்தில் வெளிநாடு சுற்றுலா பயணம் சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.அவர் சென்ற தனி விமானம் மாலத்தீவு மற்றும் மொரீஷியஸ் நாட்டில் தரை இறங்குவதற்கு மட்டும் விமான நிலைய உயர் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கியுள்ளதாகவும், அதே நேரம் தனி விமானம் வெளிநாடு சுற்றுலா செல்வதற்கு மத்திய அரசிடம் முறைப்படி அனுமதி வாங்கவில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது.

இதையடுத்து மத்திய அரசு ரவீந்திரநாத்குமாரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது ..

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை