November 27, 2020 Friday 07.01 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 20 2020 6:41 AM

உருக்கமான தற்கொலை கடிதம்: ஆன்லைன் விளையாட்டில் நேர்ந்த கொடுமை

Posted Date : Oct 20 2020 6:41 AM

புதுச்சேரியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அக்கடிதம் தற்போது இணையத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

சில நாட்களாகவே ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி பணம் மற்றும் உடல்நலத்தை இழந்து நிம்மதியான வாழ்வை தொலைத்து பின் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகாமாகி கொண்டே இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே பாமக நிறுவனர் ராமதஸ் ஆன்லைன் விளையாட்டை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்ற மத்திய அரசு கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் விஜயகுமார், மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் நிர்க்கதியாக விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் அவரது குடும்பத்தாருக்கு எழுதிய தற்கொலை கடிதம் கண்ணீரை வரவழைக்கின்றது

.அக்கடிதத்தில்,

"என்னை மன்னிச்சிடு மதி. என்னால் ஒன்னும் பண்ண முடியலை மதி....

தூங்காமல் கண்களெல்லாம் மங்கலா தெரிகிறது; உடல் முழுவதும் பலவீனாமாகிவிட்டது மதி, நான் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் விடவில்லை மதி. கணக்குப் பார்த்தால் 30 லட்ச ரூபாய்க்கு மேல் விட்டுவிட்டேன். தப்புதான்; போதை மாதிரி விளையாடி கொண்டே இருந்து விட்டேன். ஒரு நாளைக்கு ரூ.50,000 ஜெயித்தால் அடுத்த மூன்று நாட்களில் நம்மிடமிருந்து 2 லட்ச ரூபாய் வெளியில் போய்விடுகிறது.

அது எனக்குப் புரியவே இல்ல. அது புரியாமலே விட்ட பணத்தை எடுத்து விடலாம் என இந்த டோர்னமெண்டுல ஜெயித்து விடலாம், அடுத்த டோர்னமெண்டில் ஜெயித்து விடலாம் என பல டோர்னமெண்ட் விளையாடிவிட்டேன் மதி. கடைசி வரைக்கும் 'அவனுங்க நம்மள வச்சித்தான் செஞ்சானுங்கன்னு' எனக்கு தெரிந்தது. தெரிந்தும் விளையாடினேன். இப்பொழுது கூட எனக்கு விளையாட வேண்டும் என்று தான் தோணுகிறது. அந்த அளவுக்கு அதுக்கு அடிக்ட் ஆகியிருக்கேன். எப்படித்தான் நான் அடிக்ட் ஆனேன்னு என தெரியவில்லை.

நான் உன்னை அந்த அளவுக்கு காதலிக்கிறேன் மதி. குழந்தைகளை பாத்துக்கொள். இரண்டு வங்கி கணக்குகளிலும் கொஞ்சம் பணம் உள்ளது . இப்பொழுது கூட அந்த ஆன்லைன் ரம்மி ஆப்பில் இருந்து 17,000 ரூபாய் உன் கணக்கிற்கு ரீடம் பண்ணிருக்கேன். அது திங்கட்கிழமை உனக்கு வந்து விடும். இடத்தை வித்துடு. நகையெல்லாம் விற்றுவிட்டு மதுரையில உன் தாய் வீட்டில் போய் குடிபெயர்ந்து விடு. எங்க வீட்டில் யாரும் உன்னை அந்தளவுக்கு பார்த்து கொள்ள மாட்டார்கள்.

என்னை மட்டும் மறந்துவிடாத மதி. 1 1/2 வருஷத்துல வாழ்க்கை இப்படி மாறிவிட்டது. எப்படி ஓடி ஓடி சம்பாதித்தேன் தெரியுமா ? டிஸ்ட்ரிபியூஷன்ல அப்படி இருந்தேன் நான். இன்று அந்த பணியில் நான் கேவலமாக உள்ளேன். என்னால வேலையே செய்ய முடியவில்லை. லட்சக் கணக்கில் சம்பாதித்தேன். ஆனால் இன்று என் மூளை வேலை செய்யவில்லை. எல்லாம் மங்கிப் போய்விட்டது. ஒரு காலத்தில் இந்தியன் மொபைல் டிஸ்டிரிபியூஷன் என்ற என் பெயர் தமிழ்நாட்டிற்கே தெரியும் அளவிற்கு என் பேரை பிரபலபடுத்தி வைத்திருந்தேன். ஆனால் இந்த ரம்மியில் அடிக்ட் ஆனதால் என்னால் வியாபாரத்தை சரியாக செய்ய முடியவில்லை.

குழந்தைகளை நன்றாக கவனித்து கொள். உன்னை என்னால் பார்த்து கொள்ள முடியவில்லை. என்னைவிட்டு எல்லாம் போய்விட்டது. என்னால் என்னை மாற்றிக்கொள்ள முடியவில்லை. எனக்கு இதை விட்டால் வேற வழியும் தெரியவில்லை மதி. ஐசியா நிறுவனத்தில் இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் உள்ளது. கணக்கில் கொஞ்சம் பணம் உள்ளது அதுபோக வீட்டில் மஞ்சப் பையில கொஞ்சம் பணம் உள்ளது . குழந்தைகளை பார்த்து கொள் மதி. இன்சூரன்ஸ், பாரதியார் வங்கி கணக்கை முறித்து விடு.

அனைத்தையும், ஒரே கணக்கில் இட்டு ஊருக்கு சென்று விடு. வங்கியில் செலுத்தி வர வட்டியை வைத்து குழந்தையை பார்த்து கொள் .பசங்களை என்னை மாதிரி வாழ விடாத மதி. நீ ஏதாவது பண்ணணும் நினைச்சா, இந்த ஆன்லைன்ல நடக்கற விஷயத்தை எல்லாம் தடுக்குறதுக்கு யாருகிட்டயாவது சொல்லு. ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் எதிலாவது போட்டு என் வாழ்க்கை அழிஞ்சி போணது , என் கணவன் செத்துட்டான்னு போட்டு ஆன்லைன்ல நடக்கற எல்லா கேம்களையும் ஆஃப் பண்ணி விட்டுடு. அது எனக்கு மனத்திருப்தியை அளிக்கும்.

இன்று நான் சாவதற்கு முழு காரணமும் அதுதான். என்னைப் போல் பலர் அதில் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். விளையாடி கொண்டே இருக்கிறார்கள். என்ன முடிவில் விளையாடுகிறார்கள் என தெரியவில்லை. முடிந்த அளவிற்கு அந்த கம்பெனியை எல்லாம் இழுத்து மூடிடு மதி. எனக்கு தெய்வம் நீ. என் தெய்வத்தை விட்டு நான் போகிறேன் . பாப்பாவை பார்த்து கொள் மதி. பாப்பாவை கூட கூட்டிக்கிட்டு போயிலாம்னுதான் பாத்தேன். அந்த காரியத்தை பண்ண தைரியம் இல்லை எனக்கு. அப்பா இல்லாம என் மகள் எப்படி வாழுவாள் என்று தெரியவில்லை. இந்த ஆவியெல்லாம் உண்மையாக இருந்தால் உங்க கூடவேதான் இருப்பேன். உங்களை பார்த்து கொண்டேதான் இருப்பேன். நான் எங்க செத்துக் கிடக்கிறேனோ அங்கதான் என் வண்டியும், போன் ரெண்டுமே இருக்கு. சின்ன போனை பிரபு சாருகிட்டக் குடு. அவர் ஈ.சி பண்ணி அதை பணமாக்கிருவாரு. என்னை விட்ருங்க சந்தோஷம். எல்லாரும் என்னை முட்டாள், பைத்தியக்காரன்னு என்ன வேணும்னாலும் சொல்லட்டும் மதி. ஆனால் என்னால் முடியலை. என் மைண்ட் என்ன விட்டுப் போய்விட்டது.

எனக்காக ஒரே விஷயம் பண்ணு. இந்த ஆன்லைன் கேம் எல்லாத்தையும் தடுப்பது மாதிரி முடிஞ்ச அளவுக்கு எல்லா குருப்லயும் ஷேர் பண்ணி விடு. என்னாலயாவது அது நின்னதா இருக்கட்டுமே. நானே கடைசியா இருக்கட்டும். எனக்கு அதாவது சந்தோஷமா இருக்கும். நான் எவ்ளோ பணத்தை விட்டேன்னு நீ தெரிஞ்சுக்க ஆசைப்பட்டா என் ஆந்திரா பேங்க் அக்கவுண்டையும், உன் இந்தியன் பேங்க் அக்கவுண்டையும் எடுத்து நீ செக் செய்; உனக்குப் புரியும். வெளிய சொல்ல முடியாத அளவிலான பணம் அது. அதையெல்லாம் என்னால சம்பாரிக்கவே முடியாது. ஆனால் சம்பாதித்து விட்டுவிட்டேன். பச்சையப்பன்கிட்ட பத்திரம் மாட்டிக்கிட்டு இருக்கு. அதை விற்று கடனை அடைத்து விடு. நீ உன் அம்மாகூட பேச ஆரம்பிச்சிட்டா மாறிடுவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ வாழு. பசங்கள பாத்துக்கோ.

ஐ லவ் யூ மதி.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை