December 06, 2020 Sunday 06.07 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 20 2020 8:45 AM

டிவிட்டரில் விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் : கனிமொழி கண்டனம்

Posted Date : Oct 20 2020 8:45 AM

டிவிட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக பிரபலங்களின் குடும்பத்திலுள்ள பெண் குழந்தைகளை நோக்கி பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சமீபத்தில் சென்னை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படாததை கண்டித்து கிரிக்கெட் வீரர் தோனியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது . தற்போது விஜய்சேதுபதியின் 800 திரைப்பட நிலைப்பாடுக்கு எதிராக ஒருவர் அவரது பெண் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்துள்ளார் .

முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வரலாற்று படத்தில் நடிப்பதாக விஜய்சேதுபதி இருந்தார். இதற்கு பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, விஜய் சேதுபதி இறுதியாக முரளிதரன் வரலாற்று படத்தில் இருந்து விலகினார்.

 

இந்நிலையில் சமூக வலைத்தளமான டிவிட்டரில் ரித்திக் என்ற ஒரு நபர் விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்தார். இதற்கு பலர் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில், விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

ட்வீட் செய்த ரித்திக் என்பவர் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை