December 06, 2020 Sunday 06.14 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 20 2020 9:07 AM

இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஒரு செய்தி சொல்ல விரும்புறேன் - மோடி சூசகமான பதிவு

Posted Date : Oct 20 2020 9:07 AM

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை என்றாலே ஒரு வித அச்சம் தோன்றுவது வாடிக்கையாகிவிட்டது .அதற்கு முக்கிய காரணம் ஒரே இரவில் பண மதிப்பிழப்பு , மாதக் கணக்கில் ஊரடங்கு உத்தரவு என்பன . இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் நாட்டு மக்களிடையை ஒரு செய்தியை பகிர விரும்புகிறேன் என மோடி அறிவித்துள்ளார் .

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி தொடர்ந்து உரையாற்றி வருகிறார்.இந்நிலையில் கொரோனாவிற்கு இன்னும் மருந்து கண்டுப்பிடிக்காத சூழ்நிலையில் உலகம் முழுவதும் இந்தியா உட்பட கொரோனாவின் இரண்டாவது அலை பரவும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் .

கேரளாவில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின்னர், ஓணம் பண்டிகை காலத்தில், கேரள மக்கள் சமூக இடைவெளியை சரியான முறையில் பின்பற்றாததால், தற்போது கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.இன்னொரு புறம் ஹைதராபாத்தில் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது பருவமழை தொடங்கி விட்டதாலும், தசரா, தீபாவளி பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதாலும் இந்தியாவில் கொரோனா பரவலின் 2வது அலை பரவலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

இந்நிலையில், நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணியளவில் பிரதமர் மோடி உரையாற்ற இருப்பது பொதுமக்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இன்றைய உரையின் போது, பண்டிகை கால முன்னெச்சரிக்கைகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி அறிவுறுத்தரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை