November 27, 2020 Friday 06.54 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Oct 20 2020 11:01 AM

வெங்காயம் கிலோ 100 ரூபாயா ? தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை !

Posted Date : Oct 20 2020 11:01 AM

வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த, சென்னையில்  பண்ணை பசுமை கடைகளில் நாளை முதல் கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது.தமிழகத்திற்கு கா்நாடகம், ஆந்திரா, மராட்டியம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால், தற்போது அங்கு பெய்து வரும் தொடர்மழை காரணமாக வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

திங்களன்று, நாட்டின் மிகப்பெரிய வெங்காய சந்தையான லாசல்கானில் (நாசிக்) வெங்காயத்தின் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ .6802 ஐ எட்டியது. இது இந்த ஆண்டு மிக உயர்ந்த விலை. சில்லறை சந்தையில் வெங்காயத்தின் விலை ரூ .100 ஐ தாண்டக்கூடும் என்று சந்தை வர்த்தகர்கள் நம்புகின்றனர்.

இந்நிலையில், ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிலோ பெரிய வெங்காயம் ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது.இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதில், வெங்காயத்தை பண்ணை பசுமைக் கடைகள் மூலம் கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பசுமைக் கடைகளில் நாளை முதல் விற்பனை செய்யவும், தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை